Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா வருகைக்கு இடையே.. அவசர அவசரமாக ஆளுநர் ரவியை சந்திக்க போன எடப்பாடி.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி உடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் சந்திப்பு நடத்தி உள்ளார். திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். ஆனாலும் இந்த சந்திப்பில் .. திமுக மீதான புகார் தாண்டி பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் திருச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணியுடன் மூடிய அறைப் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு கூட்டணித் தலைவர்களுக்கு இடையேயான வழக்கமான ஒன்று என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இந்த திங்கள்கிழமை கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி உடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார்.

tamilnadu Election 2026 2026 tamil nadu amit shah

அமித் ஷா

அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற 'தமிழகம் தலைநிமிர தமிழர் பயணம்' நிறைவு விழாவில் பங்கேற்றார். ஞாயிறன்று மாலையும் அமித் ஷாவும், வேலுமணியும் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவுறுத்தலால் வேலுமணி அமித் ஷாவை சந்தித்தார் என அதிமுக தலைவர்கள் குறிப்பிட்டனர். அமித்ஷாவுடனான சந்திப்புக்குப்பின், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடனும் வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

திங்கள்கிழமை காலை திருச்சியில், பாஜக மகிளா மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்த 'நம்ம ஊரு மோடி பொங்கல்' கொண்டாட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். கட்சியின் கலாச்சார திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் 1,008 பானைகளில் பொங்கலிடப்பட்டது.

இந்த நிகழ்வில் அமித் ஷா உரையாற்றவோ, பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவோ இல்லை. இதுகுறித்து செய்தியாளர் கேள்விக்கு, மேடையில் இருந்தவர்களுக்கு அவர் இந்தியில் வாழ்த்து தெரிவித்தார் என்று தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். வேலுமணி சந்திப்பு வழக்கமானது என்பதால் அதில் எந்த அசாதாரணமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

அமித் ஷா தீவிரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தமிழகத்திற்கான பாஜகவின் வியூகம் தொடர்பாக, அவர் வாரத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வந்து தங்குவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு ஒன்றைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு

அமித் ஷா தங்குவதற்கு வசதியான ஒரு இல்லத்தைத் தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. கிண்டி, அடையார் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் அவருக்கான தற்காலிகக் குடியிருப்பு தேர்வுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சில பாஜக மூத்த தலைவர்கள் நேரடியாக இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடைசியில் தீவிர சோதனைக்கு பின் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருக்கும் பனையூர் நீலாங்கரை வீட்டிற்கு அருகிலேயே அமித் ஷா வீடு பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி சந்திப்பு

தமிழ்நாடு வந்த அமித்ஷாவை சந்திக்காத நிலையில்.. ஆளுநர் ஆர். என் ரவி உடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு நடத்தி உள்ளார். இந்த சந்திப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் சந்திப்பு நடத்தி உள்ளார். கூட்டணி பற்றி பேசுவதற்காகவா அல்லது வேறு விவகாரங்கள் பற்றி பேசுவதற்காக இந்த சந்திப்பு நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+