கர்ஜனை மொழி - என் பாசத்துக்குரிய தங்கை கனிமொழிக்கு.. ! ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: பெண்ணுரிமைக்காகவும் தமிழகத்தின் தன்னுரிமைக்காகவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி என் தங்கை கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்றக் குழுத் தலைவர் @KanimozhiDMK அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கனிமொழி பிறந்தநாள்
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழியின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள இல்லத்தில் பெருந்திரளாகக் கூடினர். நீண்ட வரிசையில் நின்று, கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மெரினாவில் கனிமொழி
முன்னதாக கனிமொழி தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடத்தில் மாலை அணிவித்து ஆசி பெற்றார்.
அமித்ஷா வாழ்த்து
பின்னர் தனது அண்ணனும் திமுக தலைவருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அமித்ஷா, கனிமொழிக்கு போன் போட்டு வாழ்த்து சொன்னதாக தெரிகிறது.
2022 ஆம் ஆண்டு முதல்
இந்த நிலையில்தான் ஸ்டாலின், கனிமொழிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக பொதுக் குழு கூட்டம் நடந்த போதுதான் கனிமொழியை கர்ஜனை மொழி என்ற அடைமொழியுடன் ஸ்டாலின் அழைக்கத் தொடங்கினார்.
திமுக பொதுக் குழு
திமுக பொதுக் குழு கூட்டத்தில் 2ஆவது முறை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து, மற்ற பதவிகளுக்கு தேர்வானவர்களையும் அறிவித்தார்.
அடைமொழி
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தலைமை நிலைய முதன்மை செயலாளராக நேருவுக்கு நிகர் நேரு என போற்றப்படும் நேரு நியமிக்கப்படுகிறார். திண்டுக்கல்லின் தீரர் கழகத்தினுடைய வீரர், ஐ பெரியசாமி துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
பொன்முடிக்கும் அடைமொழி
தலைவர் கலைஞர் அவர்களால் அறிவுமுடி என போற்றப்பட்ட முனைவர் பொன்முடி துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். தலைவர் கலைஞர் அவர்களால் தகத்தகாய சூரியன் என அழைக்கப்பட்ட ஆ ராசா துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்ஜனை மொழி
அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைக்கும் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லியிலே ஒலிக்கக் கூடிய கர்ஜனை மொழி கனிமொழி புதிதாக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார் என அறிவித்திருந்தார்.
மாலை அணிவித்த கனிமொழி
கனிமொழியை மேடைக்கு வருமாறு அழைத்ததும் கீழே இருந்தவர்களுக்கு கை கொடுத்த கனிமொழி மேலே வந்த போது அவருக்கு கைகுலுக்கி வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின். பிறகு பெரியார், அண்ணா, கருணாநிதி, க அன்பழகன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு கனிமொழி மாலை அணிவித்தார்.
தமிழுக்காக போராடும் கனிமொழி
டெல்லியில் ஒலிக்கக் கூடிய கர்ஜனை மொழி என அழைப்பதற்கேற்ப நாடாளுமன்றத்தில் கனிமொழி மத்திய அரசிடம் கேள்விக்கனைகளை தொடுத்து வருகிறார். முக்கியமாக தமிழ் மொழிக்காகவும் தமிழக மக்களுக்காகவும் அவர் கர்ஜித்து வருகிறார்.
கனிமொழிக்கு முக்கியத்துவம்
அது முதல் ஸ்டாலின் கனிமொழியை மகளிர் மாநாடு உள்ளிட்ட இடங்களில் கர்ஜனை மொழி என்றே அழைத்து வருகிறார். கனிமொழிக்கு முக்கியத்துவத்தையும் ஸ்டாலின் கொடுத்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனிமொழி நியமனம்
இன்னும் 4 மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் குழுவுக்கு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" மாநாட்டில் கூட, ஸ்டாலின் பேசிய போது, "கனிமொழி தயாரித்த தேர்தல் அறிக்கைகள்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை தேடி தந்தது.
வெற்றிக் கிட்டும்
அந்த வகையில் இந்த முறையும் கனிமொழியே தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கிறார். எனவே வரும் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி கிட்டும்" என தெரிவித்திருந்தார்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications