டெல்லி குண்டுவெடிப்பு: கரூர் கூட்ட நெரிசலுக்கு தமிழ்நாடு அரசை குற்றம் சொன்ன அண்ணாமலை இப்போ எங்கே?
சென்னை: கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின்போது, தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியில் இருந்து விலக வேண்டும், வெட்கப்பட வேண்டும் என்றெல்லாம் தமிழக அரசை கூறியிருந்தார். தற்போது டெல்லி செங்கோட்டையில் கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை சொல்வாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ நிலையத்தின் அருகே நேற்று மாலை 6.52 மணி அளவில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக உபா சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் டெல்லி காவல் துறை வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், கட்சியினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தபோது, முதல்வரை பதவியில் இருந்து விலக வேண்டும், உளவுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று பல்வேறு கேள்விகளை அண்ணாமலை எழுப்பியிருந்தார்.
மெளனம் காக்கும் அண்ணாமலை
ஆனால், தற்போது தலைநகரான டெல்லியில் நடைபெற்றுள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை அண்ணாமலை மெளனம் காத்து வருவது குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பீகார் தேர்தலப்போ.. டெல்லியில் குண்டுவெடிப்பு? மோடி- அமித்ஷா- அம்பானி பொறுப்பில்லையா? திருமா கேள்வி! என்று ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிடப்பட்டிருந்து.
எங்கே அண்ணாமலை
இந்த செய்திக்கு அங்கமுத்து என்ற பெயரில் கமெண்ட் செய்துள்ள ஒன்இந்தியாதமிழ் வாசகர் ஒருவர், "எங்கே அண்ணாமலை 41 பேர் இறந்தபோது என்ன கேட்டார் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது, ஸ்டாலின் வெட்கப்படணும் என்று. இப்ப ஷா வெட்கப்படணும் என்று சொல்லுவாரா. இல்லை நான் வெட்க படுகிறேன் என்று சொல்லுவாரா, உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது, அதுவும் உச்சகட்ட பாதுகாப்பு உள்ள இடத்தில எப்படி இப்படி உளவுத்துறை கோட்டை விட்டது. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பறிபோன உயிர்கள்
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின்போது தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலை பேசியதாவது: கரூர் சம்பவத்தில் 41 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம்.
முதல் குற்றச்சாட்டு அரசு மீதுதான்
மருத்துவமனையில் இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது, இனியும் இப்படி நடக்கக் கூடாது. மருத்துவ உதவி தேவைப்பட்டால் பாஜகவினர் செய்வார்கள். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும்.
தவறிய அரசு
ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது.. 500 போலீசார் பாதுகாப்புக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அங்கு 100 பேர் கூட இல்லை. ஸ்பாட்டில் 100 போலீசார் கூட இல்லை. மாவட்ட ஆட்சியர், எஸ்பியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
பதவி விலக வேண்டும்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியில் இருந்து விலக வேண்டும். விஜய் தான் அக்யூஸ்டு நம்பர் ஒன் என்று நான் சொல்ல மாட்டேன். வீக் எண்ட் அரசியலில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
-
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications