ஜனநாயகன் வருமா? வராதா? சென்சார் கோரிய வழக்கில் ஜனவரி 9ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 9ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்க உள்ளது. ஜனநாயகன் திரைப்படம் அன்றைய நாளில் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜய், கடைசித் திரைப்படமாக அறிவித்துள்ள படம் தான் 'ஜனநாயகன்'. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் உடன், பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைக்க படத்தின் 4 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜனநாயகன்
இந்நிலையில் படம் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்காத நிலையில், அதனை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவது சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. தற்போது படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்நிலையில், படக்குழு கடந்த டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பித்தது.
ஜனநாயகன் சென்சார் பிரச்சனை
தணிக்கை வாரிய உறுப்பினர்கள் படத்தை பார்த்த பின்னர், சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தினர். அந்த உத்தரவுகளின்படி மாற்றங்கள் செய்து அனுப்பிய பின்னர், 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என படக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென படத்தில் உள்ள காட்சிகள் மற்றும் வசனங்களை குறித்து புகார் வந்துள்ளதாகவும், அதனால் படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தணிக்கை வாரியம் மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பு நிறுவனமான கேவின் புரொடக்சன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
யு ஏ சான்றிதழ்
வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "படம் ரூ.500 கோடி செலவில் எடுக்கப்பட்டது. 22 நாடுகளில், 4 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்துவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்" என தெரிவிக்கப்பட்டது. மேலும், "படம் இன்னும் வெளியாவதில்லை என்ற நிலையில், அதன் காட்சிகள் குறித்து புகார் வருவது எப்படி?" என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
தணிக்கை சான்றிதழ் தாமதம்
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சட்டத்தரணி, "படம் எவ்வளவு செலவில் எடுக்கப்பட்டது என்பது முக்கியமல்ல. மத உணர்வுக்கு புண்படும் வகையிலான புகார் வந்திருப்பதால், சட்டப்படி மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் விரிவான பதில் தாக்கல் செய்ய அவகாசம் தேவை" என்று வாதிட்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தணிக்கை வாரியத்திடம், 'ஜனநாயகன்' படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து புகார் மனுக்களும், தொடர்புடைய ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் தரப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் வாதங்கள் அனைத்தும் கேட்கப்பட்டன.
இதனையடுத்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் காலையில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
Explainer: நாளை தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்.. வாக்குப்பதிவு எப்படி நடக்கும்? -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!












Click it and Unblock the Notifications