Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவுக்கு 0% வரி.. நமக்கு 18% வரியா? டிரம்ப் ஒப்பந்தத்தால் வர்த்தக லாபம் யாருக்கு: கி. வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து, அமெரிக்காவின் வர்த்தக நலன்களுக்கு ஒன்றிய அரசு பணிந்து போவதற்கு திராவிட கட்சி தலைவர் கி.வீரமணி வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அமெரிக்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தன்னாட்சி உரிமையைச் சீர்குலைக்கும் செயல்களை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்..

டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை முதலில் 50 சதவீதமாக உயர்த்திவிட்டு, பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அதனை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது.

Trump Trade Deal

அதேசமயம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் விவசாய பொருட்களுக்கு விதிக்கப்படும் 30% முதல் 150% வரையிலான வரிகளை முழுமையாக நீக்கி 0% ஆக்க வேண்டும் என்று டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இந்த வரி விகித மாற்றமானது அமெரிக்கப் பொருட்களுக்கு சாதகமாகவும், இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளதுதான் இந்த விவகாரத்தின் முக்கியப் புள்ளியாகும்.

கி.வீரமணி கண்டனம்

இதைத்தான் மூத்த தலைவர் கி.வீரமணியும் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது: "இந்தியாவின் முடிவுகளை அமெரிக்கா அறிவிப்பதா? இந்திய இறையாண்மையை அடகு வைப்பதா? அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு 0% வரியாம்! இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய 18% வரியாம்! ஒன்றிய அரசே, அமெரிக்க ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளாதே!

இந்தியா இறையாண்மை மிக்க நாடு. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை ஒன்றிய அரசு நிறைவேற்றுகிறதா என்ற அய்யம் தீவிரமாக எழுந்துள்ளது. அதிகார பலம் மிக்க நாடுகளிடம் அடிபணிந்து போகக் கூடாது என்பதுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் அடிப்படை.

டிரம்ப் - வர்த்தகம் வரி

உலகின் பல நாடுகளுக்கு வரியை ஏற்றுகிறோம் என்று அமெரிக்கா அறிவித்தபோது, இந்தியப் பொருள்களுக்கு திடீரென 50% வரி என்று அறிவித்தது. தொடர்ந்து மிரட்டுவது போலவே அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். ரஸ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது.

இப்போது இந்தியா, ரஸ்யாவுக்குப் பதில் வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் என்று அமெரிக்காவே அறிவிக்கிறது. இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான வரிகளை 'ஜீரோ'வாகக் குறைக்க இந்தியா சம்மதித்துவிட்டதாகவும் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்தது அதிர்ச்சியளிக்கிறது.

இந்திய விளை பொருட்கள்

அமெரிக்காவிலிருந்து விவசாயப் பொருட்களை 0% வரியில் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இது இந்திய விவசாயிகளுக்குப் பேரிடியாகும். பருத்தி, ஆப்பிள் போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளித்தால், ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரா, குஜராத் மாநிலங்களுக்குப் பெரும் பொருளாதார சேதம் ஏற்படும். அமெரிக்காவில் உற்பத்தியாகும் கால்நடை தீவனமான டிடிஜிஎஸ் (DDGS) இந்தியாவிற்குள் வந்தால், இந்தியச் சோளச் சந்தை முற்றிலும் சரிந்துவிடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

இறைச்சியை உணவாகக் கொண்ட விலங்குகளின் பாலை இறக்குமதி செய்யக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறிவந்தது. இப்போது அந்த ஆர்.எஸ்.எஸ்.சையே 'மாஸ்டர்' டொனால்ட் டிரம்ப் அடக்கிவிட்டார் என்று விவசாயிகள் அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம்

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரியை ஏற்றியுள்ள நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு 30% முதல் 150% வரை இருந்த வரியை ஒன்றிய அரசு 0% ஆக மாற்றியுள்ளது. இந்த அளவுக்கு அமெரிக்காவுக்குப் பணிந்து செல்ல வேண்டிய அவசியம் என்ன?

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை வெளியே அறிவித்தது உரிமை மீறல் செயல். எனவே, அமைச்சர் பியுஷ் கோயல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்தியாவை அந்நிய நாடுகளிடமிருந்து அல்ல, ஆளத் தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.விடமிருந்து காப்பதுதான் இறையாண்மையைக் காக்க ஒரே தீர்வாகும்." என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+