பொக்கிஷம் என் பொண்டாட்டி, வாழ்க்கை பரிசு.. சென்னை திரிசூலம் பார்க்கில் வழிந்த காதல்! இப்படி ஒரு பெண்
சென்னை: சென்னையில் திரிசூலம் பகுதியில் நடந்த கொடூர கொலை சம்பவமானது, தனிப்பட்ட உறவுகளில் ஏற்பட்ட நம்பிக்கை முறிவு எவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது... இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைதாகி உள்ளனர்.. மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.. இந்நிலையில், சென்னையை அதிர வைத்த இச்சம்பவம் பற்றி கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன..
சென்னை பல்லாவரத்தில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர்தான் செல்வக்குமார். 22 வயதாகிறது.. ரீனா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. ரீனாவுக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால் , கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்..

கள்ளக்காதல் சென்னை
செல்வக்குமாருடனான தகாத உறவு ஏற்படவும் அது தீவிரமாகி, இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வாழத் தொடங்கினார்கள்.. இதனிடையே ரீனாவின் தோழியான ரஜிதாவுடன் செல்வக்குமாருக்கு நட்பு ஏற்பட்டது.. நாளடைவில் இவர்களிடையே தகாத உறவு மலர்ந்தது.. இறுதியில் மூவரின் உறவும் சிக்கலானதாக மாறியது.
இதற்கு நடுவில் ரீனா மற்றும் ரஜிதா இருவரும் செல்வக்குமாரை விட்டு விலகி, மற்ற இளைஞர்களுடன் பழக ஆரம்பித்துள்ளார்கள்.. அதிலும் 17 வயது சிறுவன் ஒருவருடன் அவர்களுக்கு ஏற்பட்ட பழக்கம், அதனை தொடர்ந்து தனிமையில் சந்திப்புகள், ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பது,போன்ற செயல்களாக வளர்ந்துள்ளன,
திரிசூலம் பார்க்
அதுமட்டுமல்ல, இவர்கள் அனைவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பல இளைஞர்களை அணுகி, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.. இப்படி பணம் பறிப்பதை செல்வக்குமாரிடமும் அரங்கேற்றியிருக்கிறார்கள்.. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார், அவர்களை கண்டித்துள்ளார்.. ரீனா, ரஜிதாவிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
நாளடைவில் ஏற்பட்ட இந்த தகராறுதான், இறுதியில் கொலைக்கு காரணமாக மாறியது. சமாதானம் பேசலாம் என்ற பெயரில் செல்வக்குமாரை திரிசூலத்தில் உள்ள பூங்காவுக்கு அழைத்துள்ளனர்.
கீழே விழுந்தும் விடாத சிறுவன்
போதையில் அங்கு சென்ற செல்வக்குமார், எதிர்பாராத வகையில் தாக்குதலுக்கு உள்ளானார். அங்கு மறைந்திருந்த 17 வயது சிறுவன், அலெக்ஸ் என்ற அவரது கூட்டாளி, கத்தியால் செல்வக்குமாரின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளனர். கடுமையாக காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து செல்வக்குமார் கீழே விழுந்தபோதும் அவரை விடவில்லையாம்.. தொடர்ந்து அவர்மீது கொண்ட ஆத்திரம் அடங்காமல் கொடூரமாக தாக்குதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
செல்வக்குமார் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்ததைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள்.. உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட செல்வக்குமார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

வாழ்க்கையின் பெரிய பரிசு
இதையடுத்து, ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.... மற்ற 3 நபர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..
ரஜிதாவுடன் செல்வக்குமார் பழகினாலும் ரீனா மீது அதிக பிரியத்தை வைத்திருந்தாராம்.. தன்னுடைய இன்டஸ்டாவில் ரீனாவை தனது "என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பரிசு என் பொண்டாட்டிதான்" என்று புகழ்ந்து பாராட்டி ரீல்ஸ் வெளியிட்டிருந்தாராம் செல்வக்குமார்...
ஆனாலும் இந்த 2 பெண்கள் உள்ளிட்ட கும்பல் செல்வக்குமாரிடமும் பணத்துக்காகவே பழகி வந்தது தெரியவந்துள்ளது... இந்த பணம் எதையும் செய்யும் போல!!
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications