மயிலாப்பூர் தொகுதி.. முட்டிமோதும் வளர்மதி, நிர்மலா பெரியசாமி.. எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன?
சென்னை: சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் அதிக முனைப்பு காட்டி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலியை கொடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் வளர்மதி, வைகைச் செல்வன், முன்னாள் எம்பி ஜெயவர்தன், நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட பலரும் முட்டி மோதி வருவதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கிறார். ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போதே வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் பல்வேறு முக்கியத் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட த.வேலு 68,392 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக சார்பாக போட்டியிட்ட ஆர்.நட்ராஜ் 55,759 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 12,600 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது.
அதிமுகவின் இந்த தோல்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபிரியா முக்கிய காரணமாக இருந்தார். அவர் மயிலாப்பூர் தொகுதியில் சுமார் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். இந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதேபோல் SIR பணிகள் காரணமாக சுமார் 88 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது.
இம்முறை புதிதாக தவெக தலைவர் விஜய்யும் களத்தில் இருப்பதால், அவர்கள் எவ்வளவு வாக்குகளை பிரிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மயிலாப்பூர் தொகுதியை பொறுத்தவரை பிராமண சமூக மக்கள், மீனவர்கள், வடமாநில மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால், அதிமுக வெல்லும் என்று அக்கட்சியினர் கருதி வருகின்றனர்.
அதனால் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிமுக அமைச்சர் வளர்மதி, ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், அதிமுக நிர்வாகி நிர்மலா பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மற்றும் மாவட்டச் செயலாளர் அசோக் உள்ளிட்டோர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர்.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு!












Click it and Unblock the Notifications