யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி?
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருப்பது கமலாலய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி ஏப்ரல் 6 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அல்லது நாளைக்குள் பாஜக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தாமதத்துக்கு பாஜக - அதிமுக இடையேயான 'டீலிங்' தான் காரணம் என்கின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்துள்ளது.

அந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தொகுதி பங்கீடு எளிதாக முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அதிலும் பல முட்டல் மோதல்கள் இருந்தது.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
குறிப்பாக, பாஜக தரப்பில் சில பலம் வாய்ந்த முக்கிய தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படாததால் பேச்சுவார்த்தைகள் நீண்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது. இதன் காரணமாகவே தொகுதி பட்டியல் இறுதி செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையை சரிசெய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தொகுதி பங்கீடு
அதேபோல் கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட தலைவர்களுடனும் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. மயிலாப்பூர், மொடக்குறிச்சி, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, மதுரை தெற்கு, திருச்செந்தூர், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 27 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.
பாஜக வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார். ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அது கட்சியின் தேசிய தலைமையிடம் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில தினங்களுக்கு முன் வெளியான உத்தேச பட்டியலில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்திரராஜன், அவிநாசியில் எல். முருகன், திருப்பூர் தெற்கில் ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அண்ணாமலை
அதேபோல், கோவை தெற்கு தொகுதியின் பதிலாக கோவை வடக்கு தொகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வானதி சீனிவாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று முதலில் தெரிவித்திருந்தாலும், தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிமுக பாஜக
இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் மூன்று முதல் ஐந்து தொகுதிகளை பாஜக கேட்பதாகவும் அதற்கு அதிமுக மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால்தான் தற்போது பாஜக தொகுதி பட்டியல் வெளியியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றனர். வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில், இன்று அல்லது நாளைக்குள் பாஜக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
-
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை! -
46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக் -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான்












Click it and Unblock the Notifications