காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்க தயாரான தவெக? பிரவீன் சக்ரவர்த்தி கொடுத்த ரியாக்சன்
சென்னை: தவெக கூட்டணியில் இணைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் வரை ஒதுக்க தயார் என்று விஜய் கூறியதாக வெளியான தகவலுக்கு பிரவீன் சக்ரவர்த்தி பதில் அளித்துள்ளார். மத்திய அரசு ஏராளமான பிரச்சனைகள் கொடுத்தும் திமுக ஆட்சியில் தமிழக பொருளாதார சூழல் உயர்ந்துள்ளதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான பிள்ளையார் சுழியை போட்டவர் ராகுல் காந்தியின் வலதுகரமாக அறியப்படும் பிரவீன் சக்ரவர்த்தி. இவர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் பெறப்பட்ட கடனுடன், உத்தரப் பிரதேச கடனை ஒப்பிட்டும் பிரவீன் சக்ரவர்த்தி சோசியல் மீடியாவில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக பேசத் தொடங்கினர்.
ஜனநாயகன் பிரச்சனை எழுந்த போதும் கூட தவெகவோ, விஜய்யோ ஒரு வார்த்தை கூட இதுவரை பேசவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து நாளிதழுக்கு பிரவீன் சக்ரவர்த்தி நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை மற்றும் திமுக ஆட்சியின் மீதான எண்ணம் குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதில் பிரவீன் சக்ரவர்த்தி பேசுகையில், தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காகவே ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம். தவெக கூட்டணியில் இணைந்தால், காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்க தயாராக இருப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.
தமிழ்நாட்டின் விஜய் முக்கிய சக்தியாக உருவாகிவிட்டார். அதனால் விஜய் குறித்து கருத்தை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நானும், விஜய்யும் சந்தித்து பேசுவதற்கு நேரம், காலம் எல்லாம் பார்க்க அவசியம் கிடையாது. விஜய்யுடன் சந்திப்பு நடந்தது உண்மைதான். அந்த சந்திப்பு தொடர்பாக அதிகம் வெளியில் பேச விரும்பவில்லை.
அதேபோல் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் நான் இல்லை. மத்திய அரசின் நிதிப் பிரச்சனைகளை கடந்தும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், இன்னும் அதிக வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பது என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!












Click it and Unblock the Notifications