"தேர்தல் நேரத்தில் இங்கு வருவதால் 100 ஓட்டு கூட கிடைக்காது”- முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ரஜினிகாந்த்
சென்னை: மறைந்த ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்தார். "தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாதது. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த விழாவிற்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்" என ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான சரவணன் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு ஏவிஎம் சரவணன் படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றில் தூய்மை என்றால் அதுதான் ஏவிஎம் சரவணன். 1975 ஆம் ஆண்டு அவர்கள் படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தபோது என் முன்னால் ஒரு பெரியவர் முன்னால் சென்று கொண்டிருந்தார். அவர் வேஷ்டி, ஜிப்பாவுடன் அணிந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் தான் ஏவி மெய்யப்ப செட்டியார். அவர்க்குப் பின்னால் வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்து கைகட்டி கொண்டே போனார். அவர் தான் ஏவிஎம் சரவணன். இதையெல்லாம் கமல் என்னிடம் சொன்னார். அதன் பின்னால் தூரத்தில் இருந்து அவரை பார்த்திருக்கிறேன். 1980 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் படத் தயாரிப்பில் இருந்து விலகி 8 வருடங்கள் ஆகியிருந்தது.
மீண்டும் ஒரு படம் தயாரிக்கலாம் என்ற நிலையில் நான் நடித்த முரட்டுக்காளை படம் முடிவானது. நான் ஹீரோவாக தேர்வு செய்ய ஏவி மெய்யப்ப செட்டியார் தான் காரணம் என சொன்னார்கள். உடனே சரவணன் ஆபிஸில் அவரை சந்தித்தேன். அந்த ஆபீஸ் மிகவும் சுத்தமாக இருந்தது. உள்ளேயே மிகப்பெரிய பாசிட்டிவிட்டி இருந்தது. ஏவிஎம் கம்பெனியில் நான் 11 படம் பண்ணியிருக்கிறேன். அதில் 9 படம் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியது.
ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு கதையையும் யார் நடிக்க வேண்டும், ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள், அதை வெற்றிப் படமாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து இசை, ஒளிப்பதிவு என அனைத்து துறைகளிலும் ஏவிஎம் கை இருக்கும். அதுதான் ஏவிஎம் சரவணன்.
நான் எஜமான் படம் நடித்தேன். அதற்கு முன்பாக நடித்த நல்லவனுக்கு நல்லவன் போன்ற ஒரு சென்டிமென்ட் படம் போல ஒரு படம் வேண்டும் என சரவணன் கூறியிருந்தார். அப்போது அவரிடம் ஆர்.வி.உதயகுமார் பெயரை சொல்லி நல்ல கதை வைத்திருக்கிறார் என சொன்னேன். கேட்டால் கதையை கொடுப்பாரா என சரவணன் கேட்க, இல்லை அவரே படம் இயக்குவார் என நான் சொன்னேன்.
உடனே, நமக்கு எஸ்.பி.முத்துராமன் இத்தனை படம் பண்ணியிருக்கிறார். அவர் ஆக்டிவாக இருக்கும்போது வேறு படம் பண்ண முடியாது என சரவணன் சொன்னார். ஒருநாள் நான் ஷூட்டிங்கில் இல்லை என கேள்விப்பட்டதும் எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்து ஆர்.வி.உதயகுமாருடன் அந்த படம் பண்ணுமாறு என் முன்னால் ஏவிஎம் சரவணனிடம் சொன்னார். அவருக்கு சம்மதம் இல்லையென்றாலும், அப்படியென்றால் நான் உங்களுக்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூம் போட்டு தர்றேன். நீங்க தினமும் அங்க வரணும் என ஏவிஎம் சரவணன் தெரிவித்தார். அதுதான் அவரின் நட்புக்கு இலக்கணம்.
ஏவிஎம் சரவணன் தனிப்பட்ட முறையில் நிறைய உதவி பண்ணியிருக்கிறார். கோடம்பாக்கத்தில் இருக்கும் என்னுடைய ராகவேந்திரா மண்டபம் அவர் தான் உருவாக்கி கொடுத்தார். போயஸ் கார்டனில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை எவ்வளவு விலை என்றாலும் வாங்குமாறு சொல்லி அறிவுரை வழங்கினார். சிவாஜி படம் வந்தபோது வயது ஆக ஆக ஆக்டிவாக இருக்கணும், பிசியா இருக்கணும். வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க என சொன்னார். அதனை இப்போது பின்பற்றி வருகிறேன். சிவாஜி படம் அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம். அதன் வெற்றி விழாவில் அப்போதைய கலைஞர் கருணாநிதி பங்கேற்றது ஏவிஎம் சரவணனுக்காக மட்டும் தான்.
அதேபோல் இந்நிகழ்வில் தன்னுடைய பணிச் சூழலுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் பதவியில் ஒவ்வொரு நாளும், ஒவொரு விநாடியும் விலை மதிக்க முடியாதவை. தேர்தல் சமயத்தில் அவர் இங்கு வந்திருப்பதால் 100 ஓட்டு அதிகம் கிடைக்கப் போவதில்லை. எனினும் இங்கு வந்திருப்பது ஏவிஎம் சரவணன் மீதுள்ள அவர் வைத்திருக்கும் அன்பு தான் காரணம். மரியாதைக்குரிய முதலமைச்சர் அன்பும், பண்பும், உயர்ந்த உள்ளமும் கொண்டவர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு." எனத் தெரிவித்தார்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications