ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க.. அனைத்து கட்சி கூட்டம்! கவனமாக தவிர்த்த தவெக
சென்னை: கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இக்கூட்டத்தில் தவெக பங்கேற்காமல் தவிர்த்திருக்கிறது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலை கொடுத்திருந்தது. இதனையடுத்து கடந்த 1ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதாவது, "தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் 6-ந் தேதியன்று (அதாவது இன்று) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மூத்த அமைச்சர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியிருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழம் பங்கேற்கவில்லை.
இது குறித்து நேற்று கட்சியின் இணை செயலாளர் நிர்மல்குமார் விடுத்திருந்த அறிக்கையில், "மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களைச் சந்திப்பதும் பரப்புரை மேற்கொள்வதும் இயல்பான ஒன்று. அது அவர்களின் உரிமையும் கூட. உரிய அனுமதி பெற்று நடைபெறும் அரசியல் கட்சித் தலைவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, அங்கிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் தார்மீகக் கடமை. தமிழக வெற்றிக் கழகம், இதைப் பலமுறை தொடர்நது வலியுறுத்தி வந்திருக்கிறது.
தமிழக மக்களின் உரிமைக் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் நம் வெற்றித் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் யாருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனாலும், சட்டம் ஒழுங்கை மதிப்பதற்காகவே அவற்றையும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் பரப்புரை, ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம், வருகிற 6.11.2025 அன்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு மட்டும் தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அப்படி என்றால் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த நிபந்தனையா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியபோது, அந்தக் கூட்டத்திற்கு எந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை ஆட்சியாளர்கள் விளக்குவார்களா?
தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை நோக்கி இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் பரப்புரை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கேட்க மறுக்கிறார்கள். இது, த.வெ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பரப்புரை நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் நெறிமுறைகளை வகுக்கச் சதித்திட்டம் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சிகளும் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் நிபந்தனைகள் இருக்க வேண்டும். இல்லையேல், நீதிமன்றம் வழியாக உரிய தீர்வு காண, தமிழக வெற்றிக் கழகம் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதைக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு!












Click it and Unblock the Notifications