Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பராசக்தி டிரெய்லரை பார்த்து பயந்த விஜய்! சிவகார்த்திகேயனுடன் மோதி மூக்கறுப்பட விரும்பாத "ஜனநாயகன்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகாமல் இருக்க வேண்டுமென்றே நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. பராசக்தி திரைப்படத்துடன் ஜனநாயகன் போட்டி போடுவதை விஜய் விரும்பவில்லை என்பதால் இந்த ஏற்பாடாம்.

ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்த நிலையில் தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்த போது அதில் மதத்தை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளும் வசனங்களும் இருக்கிறதாம். அதில் ஒரு வசனம் டிரெய்லரிலேயே, பாபி தியோல் பேசுவது போல் உள்ளது. எனவே இந்த வசனங்களை நீக்குமாறு தணிக்கை வாரியம் தெரிவித்ததாம்.

jana nayagan parasakthi vijay

ஆனால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தணிக்கை வாரியமும் சான்றிதழை வழங்காததால் நீதிமன்றத்தை நாடி தற்போது வரும் 21 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இந்த படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் வேதனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமூகவலைதளங்களில் தணிக்கை குழு உள்ளிட்டோரை கண்டபடி பேசி வருகிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த பராசக்திக்கும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் கடைசி நேரத்தில் கடந்த 9-ஆம் தேதி தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.

இதையடுத்து இந்த படம் வெளியானது. இந்த நிலையில் ஜனநாயகன் படம் வெளியாகாததால் விஜய் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து பத்திரிகையாளர் சிலர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழுக்காக அங்கேயே அப்பீலுக்கு சென்றிருக்கலாம்.

ஆனால் விஜய் பராசக்தியின் டிரெய்லரை பார்த்துவிட்டார். இதனால் நிச்சயம் ஜனநாயகன் படம் வெளியானால் பராசக்தியுடன் போட்டி போட்டு வசூலை குவிப்பது சிரமமாகிவிடும் என்பதால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸை தாமதப்படுத்த அவராகவே தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கோர்ட்டுக்கு போகுமாறு சொன்னாராம்.

ஜனநாயகன் படம் விஜய்க்கே பிடிக்கவில்லை என்கிற போது அந்த படத்தை பராசக்தியுடன் மோதவிட்டு மூக்குடைந்து போக வேண்டாம் என எண்ணுகிறாராம். பராசக்தி மொழி போர் குறித்த கதை என்பதால் அதற்கு நிறைய பேர் ஆதரவு தருவர். இதனால் ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்கும்.

ஜனநாயகனை விட பராசக்தி வசூலில் சாதனை புரிந்தால் கடைசி படம் என அறிவித்த விஜய்க்கு இது பெரிய அளவில் இமேஜை பாதித்துவிடும். நேற்று வந்த சிவகார்த்திகேயனிடம் விஜய் தோல்வி என்ற ரேஞ்சுக்கு இது ப்ரொஜெக்ட் செய்யப்பட்டுவிடும்.

தற்போது அரசியல் மேடைகளில் பேசும் விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என கூறி வருகிறார். இந்த நிலையில் பராசக்தியுடன் மோதி ஜனநாயகன் தோல்வி அடைந்தால், சிவகார்த்திகேயன் படத்துடனேயே நிற்க முடியவில்லை. இதில் திமுகவுடன் போட்டியிட்டு வெல்ல போகிறீர்களா என்ற கேள்வி வந்து அவரது இமேஜை காலி செய்துவிடும் என்பதால்தான் படத்தின் ரிலீஸை தள்ளி போட விஜய் சொல்லி தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டை நாடியது என்கிறார்கள்.

எனவே நாடு முழுவதும் பரவிய பராசக்"தீ" தணிந்தவுடன்தான் ஜனநாயகன் வருவான்(ர்) என சொல்லப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் மெகா ஹிட் ஆகாது போலயே! லியோவை விட ஜனநாயகன் படத்திற்கு கலெக்ஷன் அதிகமாக்க வேண்டும் என படக் குழு நினைத்திருந்தது. அவர்களின் ஆசை நிறைவேறுமா இல்லை சுக்குநூறாகுமா என்பது படம் ரிலீஸானதும்தான் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+