சிவகார்த்திகேயன் செய்த.. இந்த ஒரு விஷயத்தை செய்திருந்தால்.. விஜயின் ஜனநாயகன் தப்பிச்சு இருக்குமே!
சென்னை: நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. படத்திற்கு தணிக்கை கிடைக்காத காரணத்தால் தற்போது வெளியீடு தள்ளிப்போய் உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் செய்த ஒரு விஷயத்தை செய்திருந்தால்.. விஜயின் இந்த படத்திற்கு சிக்கல் வந்திருக்காது என்று சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்ஷன்ஸ் LLP நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
மத்திய அரசு வைத்த வாதம்
அமரன் பட சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்த ஒரு விஷயத்தை செய்திருந்தால்.. விஜயின் இந்த படத்திற்கு சிக்கல் வந்திருக்காது என்று சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அதன்படி நேற்று மத்திய அரசின் வழக்கறிஞர், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தாமதத்திற்கான காரணத்தை நீதிமன்றத்தில் விளக்கினார்.
அவர் விளக்கமளித்தபடி, திரைப்படம் ராணுவ சீருடைகள், சின்னங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக குறியீடுகளைக் கொண்டுள்ளது. இதனால், தணிக்கை வாரியம் அதனை மறுஆய்வுக் குழுவுக்கு, கூடுதல் விவாதம், நிபுணர் ஆலோசனைக்காக அனுப்பியுள்ளது. 'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.
ஒரு திரைப்படம் பரிசீலனைக் குழுவால் பார்க்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அக்குறிப்பிட்ட பரிந்துரைகளில் CBFC தலைவர் திருப்தி அடையாத பட்சத்தில், மறுபரிசீலனை செய்வதற்காக அதை சீராய்வுக் குழு அல்லது மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ASG விளக்கினார். சினிமாட்டோகிராஃப் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் இந்த நடைமுறைகளை தெளிவாக வரையறுக்கிறது, என்றார்.
சிவகார்த்திகேயன் செய்த சம்பவம்
இது புதிய நடைமுறையல்ல; பாதுகாப்புத் துறை குறியீடுகளைப் பயன்படுத்தும் படங்களுக்கு இதுவே வழக்கம். ஆனால் தயாரிப்பாளர்கள் முன்னரே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இச்சிக்கலைத் தவிர்த்திருக்கலாம்.
தமிழகத் திரையுலகிலேயே இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் உண்டு. 'அமரன்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, படப்பிடிப்பு முடிந்ததும் பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான காரணத்தை விளக்கி, தணிக்கை வாரியத்திற்குச் சமர்ப்பிக்கும் முன்பே தடையில்லா சான்றிதழைப் பெற்றனர்.
'அமரன்' குழு ஒருபடி மேலே சென்று, வெளியீட்டிற்கு முன்பே ராணுவ அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினருக்குச் சிறப்புத் திரையிடல்களை நடத்தியது. பின்னூட்டங்களைப் பெற்று, ஆட்சேபணைகளையோ அல்லது தவறான புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இல்லை என்பதை உறுதிசெய்தனர்.
இத்தகைய முன்னுதாரணங்கள் இருந்தும், 'ஜனநாயகன்' குழு இதே அணுகுமுறையைப் பின்பற்றாதது ஆச்சரியமளிக்கிறது. ஜனநாயகன் குழு இந்த படத்தில் ராணுவ சின்னங்களை பயன்படுத்த NOC வாங்கவில்லை. அதுவே படம் இப்போது சிக்கலாவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது.
-
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications