முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக்
மதுரை: தமிழக வெற்றி கழக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனக்கு முத்தம் கொடுத்து நண்பரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், 'வெற்றியோடு வா நண்பா' என அனுப்பி வைத்ததாகவும், மாற்றத்தை தேடும் மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அந்த மக்கள் முகமான விஜய் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என நடிகரும் தூத்துக்குடி தவெக வேட்பாளருமான ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
தேர்தல் தேதி வெளியான பின்னர் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளை முடுக்கி உள்ளனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடப் போகும் நடிகர் ஸ்ரீநாத் சென்னையில் இருந்து விமானம் மூலம் தொகுதிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாநகரத்தில் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடிகர் ஸ்ரீநாத்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீநாத்," முதல் முறையா தேர்தல்ல களம் இறங்குகிறேன். தூத்துக்குடியை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்றால், இது கழகம் முடிவு பண்ண ஒரு விஷயம். தலைவர் முடிவு பண்ண ஒரு விஷயம். ஒவ்வொரு வேட்பாளரும் எங்கு போட்டியாட வேண்டும் என்று நம்மளுடைய விருப்பம் என்னவா இருந்தாலும், கழகத்தினுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி செயல்படுவது தான் அடிப்படை.
தூத்துக்குடி
தமிழகம் முழுவதும் கண்டிப்பா ஒரு மாற்றத்தை எல்லாருமே... அந்த மாற்றத்துக்காக வெயிட் பண்றாங்க. ஒரு மாற்றம் நிகழும் அப்படின்னு கண்டிப்பா நம்புறாங்க. தூத்துக்குடியிலயும் அந்த மாற்றம் ஏற்படும் அப்படின்றத ஆணித்தரமா நான் நம்புறேன். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இருக்காங்க அதிமுக-ல, இப்ப திமுக-லயும் அமைச்சர் இருக்காங்க. அதனால், போட்டி கடுமையா இருக்கும், விறுவிறுப்பாக இருக்கும் நாங்க ரொம்ப ரொம்ப உறுதிய இருக்கோம்.
தவெக
அறிமுகக் கூட்டத்துல முத்தம் கொடுத்து அனுப்பி வச்சாரு (விஜய்), பர்சனலா அட்வைஸ் சொல்லி அனுப்பி வச்சார். வெற்றியோட வா நண்பா அப்படின்றத மட்டும் சொன்னாரு. தூத்துக்குடியில 'தவெக'-க்கு மக்கள் ஏன் ஓட்டு அளிக்கணும்னு கேட்டா, மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா இந்த தமிழ்நாட்டுல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தலைவர் விஜய்
இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம், எங்க தலைவர் செய்வாரு. புதுசா வாக்குறுதியைத் தாண்டி, அது என்னென்ன நாங்க செய்யணும்னு நாங்க எல்லாம் ஒரு பட்டியலே வச்சிருக்கோம் எங்களுடைய அடிப்படை நோக்கம் என்ன அப்படின்னா, இதுவரைக்கும் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை, தவறவிட்ட விஷயத்தை நாங்க செய்வோம்.
கனிமொழி
இப்ப முதல்வர் சகோதரி (கனிமொழி) அங்க இருக்காங்க, திமுக-வோட அலை அங்க அதிகமா இருக்கு. நீங்க இந்த போட்டியை எப்படி முன்னெடுக்கப் போறீங்க? என்ற கேள்விக்கு, போட்டி கடுமையா இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். நாங்க ரெடி, எதையும் சந்திக்கிறதுக்கு தயாராக இருக்கோம். அந்த நோக்கத்தோடு தானே தலைவர் களம் இறங்கியிருக்கிறார்.
தவெக பிரச்சாரம்
உங்கள் தலைவர் பிரசாரம் பண்ற இடத்துக்கு அனுமதி மறுக்கப்படுது, தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கு. நேத்து கூட ஒரு கூட்டத்துல பெண்கள் மேல பாட்டில் எறிஞ்சு ஒரு பிரச்சனை வந்தது. இதை ரொம்ப நாகரிகமா நாங்க பேஸ் பண்றோம். அநாகரிகமா அவங்க நடந்துக்கிறாங்க அப்படின்னா, எங்க கழகமும் எங்க தலைவரும் இதை ரொம்ப ஒரு நாகரிகமா பேஸ் பண்ணுவாரு. அப்படித்தான் எங்களை ட்ரெய்ன் பண்ணிருக்காரு. அதுதான் எங்களுடைய இயல்பான ஒரு மூவ்மென்ட் ஆகவும் இருக்கும்
காவல்துறை பாதுகாப்பு
காவல்துறை பாதுகாப்பு கொடுப்பது அவங்களோட கடமை, அதை செய்யணும் அவங்க. ஒவ்வொரு இடங்கள்ல செய்றாங்க! அப்படின்னு நாங்க நம்புறோம் எங்கேயாவது கொஞ்சம் அதுல சில பிசிறுகள் எல்லாம் இருந்ததுன்னா அதை சரி செய்யணும். அரசாங்கம் தான் சரி செய்யணும். உங்கள மாதிரி ஆட்கள் அது எங்க தவறுகள் நடக்குதோ, ஊடக நண்பர்கள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், அதை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கணும்." என்றார்.
-
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா!











Click it and Unblock the Notifications