Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூக்கறுத்துவிட்ட "ஈரம்" கூட தவெகவில் காயல.. அதுக்குள்ளே அதிமுக? விஜய்யை கண்ட்ரோல் செய்ய முடியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை ஆதவ் அர்ஜூனாவும் அட்டாக் செய்து பேசுகிறார்.. 2026 தேர்தலில் அதிமுக-திமுக என்றுதான் கள அரசியல் மாறும்.. மற்றவர்கள் எல்லாம் காணாமல் போக வாய்ப்பு உள்ளது.. எனவே அதிமுகதான் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக vs தவெக இடையேதான் போட்டி என்று விஜய் சொல்லி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் அதிமுக மூத்த தலைவர் உதயகுமாரிடம் கேள்வி எழுப்பியதற்கு, எல்லோருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். யாரும் தோல்வியடைய வேண்டும் என்று இறங்க மாட்டார்கள். விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார், தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு பேசியிருப்பார் என்று பதிலளித்தார்.

TVK AIADMK Vijay

மடிப்பிச்சை கேட்குதா அதிமுக

பிறகு அதிமுகவின் கூட்டணி குறித்த நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சூசகமாக பதிலளித்தார் ஆர்.பி. உதயகுமார்.. அதிமுகவின் இந்த நிலைப்பாடு பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது..

இந்நிலையில், இதுகுறித்து Tamilkual TV என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள்.. அதுபோல எவ்வளவுதான் வாக்கு வங்கியை இழந்திருந்தாலும், அதிமுகவுக்கு இப்போதும் 20 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது..

ஆனால், விஜய்யின் வாக்கு வங்கி தெரியாது,. ஒரு தேர்தலையும் சந்திக்கவில்லை.. தனியாக தேர்தலை சந்தித்து, அனைத்து தொகுதிகளிலும் தவெகவின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்யாமல், அத்தனை வேட்பு மனுக்களையும் ஏற்க செய்ய முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..

சுயமரியாதை இழந்து?

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கட்சி, சுயமரியாதையை இழந்து எதற்காக பொதுவெளியில் விஜய்யிடம் போய் மன்றாடுகிறது? மடிப்பிச்சை கேட்கிறது? என்று தெரியவில்லை.

நாம் பலவீனமாக இருக்கலாம், ஆனால், அந்த பலவீனத்தை வெளியே காட்டிக் கொள்ளகூடாது. ஆனால் இதைத்தான் கடந்த சில மாதங்களாகவே செய்துகொண்டிருக்கிறது..

ஈரம்கூட காயலியே

தவெக பொதுக்குழுவில் அதிமுகவுக்கான கூட்டணி கதவு மூடப்பட்டுவிட்ட நிலையில், தனித்து போட்டி என்று தங்கள் முடிவை அந்த பொதுக்கூட்டத்திலேயே சொல்லிவிட்ட பிறகும், எதற்காக உதயகுமாரை வைத்து அழைப்பு விடுக்கிறார்கள் என்றால் அதிமுக திருந்துவது போல தெரியவில்லை. தொடர்ந்து மூக்கறுக்கொண்டே இருக்கிறார்கள்..

கரூர் விவகாரத்தில் விஜய்க்கு முட்டுக்கொடுத்து சட்டசபையில் பேசியதே எடப்பாடி பழனிசாமி செய்த தவறு.. அப்படி தங்களுக்காக வக்காலத்து வாங்கிய அதிமுகவை, ஜஸ்ட் லைக் தட் என்று விஜய் கடந்து செல்கிறார்..

நியாயப்படி பார்த்தால், சிறப்பு பொதுக்குழுவில் அதிமுகவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தை இயற்றிவிட்டு, மற்ற விஷயங்களை தவெக செய்திருக்க வேண்டும். ஆனால் தவெக அப்படி செய்யவில்லை. அப்படியிருந்தும்கூட, உதயகுமார் ஏன் அழைப்பு விடுக்கிறார்? சுயமரியாதையே இல்லையா? இன்னும் தவெக சிறப்பு பொதுக்குழுவின் ஈரம்கூட காயலியே? ஜனவரி வரைக்குமாவது அதிமுக கொஞ்சம் அமைதியாக இருக்கலாமே?

கள அரசியல் திமுக - அதிமுக

இந்த அளவுக்கு தவெகவிடம் இறங்கி சென்றால், கூட்டணியே அமைந்தாலும் அது எடுபடாது.. விஜய்யை அதிமுகவால் அப்போது கட்டுப்படுத்தவும் முடியாது. இதனால் அதிமுக தொண்டர்கள் மன சோர்வு அடைவார்கள்..

அதேபோல அதிமுகவை ஆதவ் அர்ஜூனாவும் அட்டாக் செய்து பேசுகிறார்.. 2026 தேர்தலில் அதிமுக-திமுக என்றுதான் கள அரசியல் மாறும்.. மற்றவர்கள் எல்லாம் காணாமல் போக வாய்ப்பு உள்ளது.. எனவே அதிமுகதான் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+