காங்கிரஸின் 3 கோரிக்கைகள்.. விஜய்யை பாராட்டி மீண்டும் திமுகவை சீண்டிய பிரவீன் சக்கரவர்த்தி
கோவை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தை, வாக்குவாதங்கள் ஆகியவற்றால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் வரத்தொடங்கியுள்ளன. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து பேசியிருந்தது சர்ச்சையாகியிருந்தது. இதுகுறித்து காலை பிரவீன் சக்கரவர்த்தி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி ஊட்டிவிட்ட கையை கிள்ளி விடலாமா என்று திமுகவை விமர்சித்த அவர்.. விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கோவை வந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் பிரவீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் எதிர்காலத்திற்காக வைக்கப்படும் கோரிக்கை. 60 வருடங்களாக காங்கிரஸ் பலவீனமாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை தற்போது பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

காங்கிரஸின் 3 கோரிக்கைகள்
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 60 வருடங்களாக ஆட்சியில் இல்லை. அதிக சீட், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. என்பது காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை. சில எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா.
ஊட்டிவிடும் கையை கிள்ள வேண்டாம் என்பதுதான் எம்பி, எம்எல்ஏக்களின் கருத்து. காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு இது தேவையா.. இல்லையா என்பதை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா.. இல்லையா என்பதை யோசிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனுக்கு இது தேவையா.. இல்லையா.
விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சி. இங்கு காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள் கோரிக்கையை வைக்கலாம். ஆனால் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும்" என்று கூறினார்.
அப்போது தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரவீன் சக்கரவர்த்தி, "விஜய்யை சந்திப்பதில் தவறு என்ன. விஜய்யை சந்தித்து பேசினேன். அவ்வளவுதான். தமிழ்நாட்டில் இரண்டு பேர் சந்தித்து பேசக் கூடாதா. பிரவீன் சக்கரவர்த்திக்கு நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. விஜய்யை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தேன்.
விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்
இதே போல டெல்லியில் நான் நிறைய பேரை சந்திக்கிறேன். தமிழகத்தில் தான் தனிப்பட்ட சந்திப்பை இப்படி கேள்வி கேட்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் குறித்து கருத்துக்கணிப்புகள் இப்போது தேவையில்லை. விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
அது வாக்காக மாறுமா.. மாறாதா.. என்று கேள்வியையும் வைக்கிறார்கள். விஜய்யை மக்கள் நடிகராக பார்க்க வரவில்லை. அவரை ஒரு அரசியல்வாதியாக பார்க்கத்தான் வருகின்றனர். அதை யாராலும் மறுக்க முடியாது. களம் வெளிப்படையாக தெரிகிறது. விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார். விஜய்யுடன் என்ன பேசினேன் என்பதை இப்போது சொல்ல முடியாது" என்றார்.
இறுதியாக அவரிடம் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாமே என்று நாம் தமிழர் சீமான் சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரவீன், "யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், அதற்கு பதில் சொல்ல தேவையில்லை" என்று பதில் அளித்தார்.
-
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications