Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதறிய இளம்பெண்.. காரில் கடத்திச் சென்ற கும்பல்.. மீண்டும் கோவையை உலுக்கிய சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை இருகூர் பகுதியில் பரபரப்பான சாலையில் இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்றதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட இளம்பெண் யார்? காரில் வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்றிரவு நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர் இளம்பெண்ணை தாக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, இருகூர் பகுதியில் காரில் இளம் பெண்ணை கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.

Coimbatore Crime

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்தப் பகுதியில் காரை தேடினர். ஆனால், இளம்பெண்ணை கடத்திச் சென்றதாகக் கூறப்பட்ட கார் கிடைக்கவில்லை.

பின்னர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வெள்ளை நிற காரில் இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு வேகமாக கார் சென்றது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் அலறல் சத்தமும் பதிவாகியுள்ளது. இதையடுத்து இளம்பெண் கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கோவை விமான நிலையம் பின்புறம் இரவு நேரத்தில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக வந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+