Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் வேலை தேடுகிறீர்களா.. AI தொழில்நுட்பத்தில் புது மோசடி! துபாய் போலீஸ் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

துபாய்: போலி ஆவணங்களை தயாரித்து, மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரம், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த மோடி துல்லியமாக நடந்து வருகிறது என்று துபாய் போலீஸ் எச்சரித்துள்ளது. எனவே, வேலை தேடுபவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

போலி ஆவணங்களைத் தயாரிக்கச் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) மோசடியாளர்கள் அதிகரித்து வருவதாக துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது. சட்டத்தைத் தவிர்ப்பதற்கும், நிதி மோசடிகள் செய்வதற்கும் இம்முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மக்களும், நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக திர்ஹம் 7,50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Police AI

மோசடித் தடுப்பு மையம் எச்சரித்துள்ளதாவது, "போலி ஆவணங்கள் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பரப்பப்படுகின்றன. இவை தொழில்முறைத் தோற்றத்துடன் நம்பத்தகுந்ததாகக் காணப்படுகின்றன. எனினும், பல போலி ஆவணங்களில் தவறான தகவல்கள், அங்கீகரிக்கப்பட்ட படிவங்களில் இருந்து வேறுபட்ட வாசகங்கள், போலி கையொப்பங்கள், முத்திரைகள் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கலாம்.

மோசடியிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். ஆவணங்களின் தோற்றத்தைக் கொண்டு மட்டும் நம்ப வேண்டாம். புதிய ஏஐ கருவிகள் மூலம், கண்டறியக் கடினமான போலியான ஆவணங்களை மோசடியாளர்கள் தயாரிக்கிறார்கள். எனவே, ஆவணத்தின் மூலம், அதன் டிஜிட்டல் விவரங்கள், மற்றும் அதிகாரப்பூர்வ குறிப்பு எண்களை நம்பகமான ஆதாரங்கள் மூலம் சரிபார்க்க காவல்துறை பரிந்துரைக்கிறது.

ஏஐ பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரிப்பது குற்றம். இது சட்டப்படி தண்டனைக்குரியது. இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு மிகவும் அவசியம். ஏதேனும் மோசடியைக் கண்டறிந்தால், துபாய் காவல்துறை ஸ்மார்ட் செயலி, 901 எண்கள் அல்லது இணையக் குற்றங்களுக்கான e-Crime தளம் மூலம் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகச் சட்டம், அதிகாரப்பூர்வமான அல்லது அதிகாரப்பூர்வமற்ற ஆவணங்களைப் போலியாகத் தயாரிப்பதற்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்த 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 31, பிரிவு 252 இன் கீழ், அதிகாரப்பூர்வ ஆவணத்தைப் போலியாகத் தயாரித்தால் 10 ஆண்டுகள் வரை தற்காலிகச் சிறையும், அதிகாரப்பூர்வமற்ற ஆவணத்தைப் போலியாகத் தயாரித்தால் சிறைத்தண்டனையும் உண்டு.

அதே சட்டத்தின் பிரிவு 253 இன் படி, அதிகாரப்பூர்வ ஆவணத்தின் போலி நகலை உருவாக்கிப் பயன்படுத்துபவர் அல்லது தெரிந்தே பயன்படுத்துவோருக்கு 5 ஆண்டுகள் வரை தற்காலிகச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். போலி நகல் அதிகாரப்பூர்வமற்ற ஆவணம் தொடர்புடையதாக இருந்தால், அதற்கும் சிறைத் தண்டனை உண்டு.

வதந்திகள் மற்றும் இணையக் குற்றங்கள் தடுப்புச் சட்டம் குறித்த 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 34, பிரிவு 14 இன் படி, மத்திய அல்லது உள்ளூர் அரசாங்க அமைப்புகள் மற்றும் பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான மின்னணு ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தால், அதிகபட்சம் ஒரு வருடச் சிறை மற்றும் திர்ஹம் 1,50,000 முதல் திர்ஹம் 7,50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மோசடி பிற நிறுவனங்களால் வெளியிடப்பட்ட மின்னணு ஆவணங்கள் தொடர்பாக இருந்தால், சிறைத் தண்டனை மற்றும் திர்ஹம் 1,00,000 முதல் திர்ஹம் 3,00,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். போலி மின்னணு ஆவணத்தைத் தெரிந்தே பயன்படுத்துவோருக்கும் இதே தண்டனைகள் பொருந்தும்" என தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+