For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதாரே ஆதாரம்.. 3 மாநிலங்களில் மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்! ஷாக் ரிப்போர்ட்

மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் மாணவர்கள் பயனடைவதாக போலி கணக்கு காட்டியது ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியதால் அம்பலமானதாக தகவல்கள் வெளியாகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் மாணவர்கள் பயனடைந்ததாக போலியாக கணக்கு காண்பிக்கப்பட்டது ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியதன் மூலம் தெரியவந்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்படுகிறது.

இதில் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக மத்திய அரசு பலகோடிகளை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது.

 ஆதார் கட்டாயம்

ஆதார் கட்டாயம்

மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள் தங்கள் ஆதார் எண்ணை வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளி அலுவலரிடம் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டன கணைகளை தொடுத்தனர்.

 வெளிப்படைத் தன்மை

வெளிப்படைத் தன்மை

ஆதார் எண்ணை கட்டாயமாக்கினால்தான் அதில் உள்ள முறைகேடுகளை வேரறுக்க முடியும். இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

 3 மாநிலங்களில்...

3 மாநிலங்களில்...

மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மதிய உணவு உட்கொள்ளாத மாணவர்களையும் சேர்த்து 4.4 லட்சம் மாணவர்களின் பெயர்கள் கொண்ட போலி பட்டியலை தயார் செய்து ஆண்டுதோறும் அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.

 நாடு முழுவதும்..

நாடு முழுவதும்..

வெறும் 3 மாநிலங்களில் ஆதார் எண் இணைக்காத திட்டத்தில பயன்பெறாத 4.4 லட்சம் மாணவர்கள் இருக்கும் போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் போலியான மாணவர்கள் கண்டறிப்படால் மத்திய அரசுக்கு ஏராளமான தொகை மிச்சமாகும்.
கேஸ் சிலிண்டருடன் ஆதார் எண்ணெய் இணைத்ததால் போலி இணைப்புகள் மூலம் அரசுக்கு அதிகஅளவிலான மானியத் தொகை மிச்சமானது குறிப்பிடத்தக்கது.

English summary
The 12-digit Aadhaar number has helped states strike off 4.4 lakh “ghost students” from schools across Jharkhand, Manipur and Andhra Pradesh, for whom the government had been earmarking funds under the mid-day meal scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X