For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா மரணம்- மோடி, சச்சின் உட்பட பிரபலங்கள் இரங்கல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பி.சி.சி.ஐ தலைவரான ஜக்மோகன் டால்மியா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் உட்பட தலைவர்களும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா நேற்றிரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 75.

மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். வியாழக்கிழமை இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை கொல்கத்தாவில் உள்ள பி.எம். பிர்லா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த டால்மியாவுக்கு இன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார்.

நரேந்திர மோடி:

நரேந்திர மோடி:

பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "டால்மியா ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் துயரங்களில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சச்சின் இரங்கல்:

சச்சின் இரங்கல்:

பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டள்ள சச்சின் டெண்டுல்கர், "ஜக்மோகன் டால்மியா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனது கடைசி டெஸ்ட் போட்டிக்கு முந்தைய போட்டியை மறக்க முடியாத போட்டியாக மாற்றியவர். அவர் எனக்கு அளித்த ஊக்கம் நினைவு கூறத்தக்கது" என கூறியுள்ளார்.

கபில்தேவ்:

கபில்தேவ்:

பி.சி.சி.ஐ தலைவர் டால்மியா மறைவு குறித்து கபில் தேவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டால்மியா கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தினார். மிகச்சிறந்த நிர்வாகிகளில் டால்மியாவும் ஒருவர்" என கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி:

பிரணாப் முகர்ஜி:

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டால்மியா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி:

மம்தா பானர்ஜி:

ஜக்மோகன் டால்மியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "டால்மியா மேற்கு வங்க மாநிலத்தின் மீது உண்மையான அன்பு வைத்திருந்தார். விளையாட்டு நிர்வாகிகளில் தலைசிறந்தவராகவும் பெரிய ஆளாகவும் திகழ்ந்தார்" என கூறியுள்ளார்.

பி.சி.சி.ஐ ராஜிவ் சுக்லா:

பி.சி.சி.ஐ ராஜிவ் சுக்லா:

அவரத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பி.சி.சி.ஐயின் ராஜிவ் சுக்லா, "இந்திய கிரிக்கெட் உலகிற்க்கு இது அதிர்ச்சிகரமான செய்து. பி.சி.சி.ஐ அமைப்பை வெளிப்படையான அமைப்பாக மாற்றியவர். எங்களது சிறந்த நிர்வாகியை இழந்து விட்டோம்" என கூறியுள்ளார்.

English summary
Various politicians and sport field celebrities condolence for BCCI jagmohan dalmia's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X