For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

118 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறது திமுக கூட்டணி: நியூஸ் நேஷன் எக்ஸிட் போல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று நியூஸ் நேஷன் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

நியூஸ்நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு இதோ:

திமுக கூட்டணி 114 தொகுதிகள் முதல் 118 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 95-99 இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளது.

DMK will come to power in Tamilnadu says CNN iBN exit poll

மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- 14 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜக 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், பிற கட்சிகள் 9 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் நியூஸ் நேஷன் கூறுகிறது.

அதேநேரம், அதிமுகவுக்கு 35% வாக்குகளும், திமுகவுக்கு 39% வாக்குகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. மக்கள் நலக் கூட்டணி- தேமுதிகவுக்கு 14% வாக்குகள் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 4% வாக்குகள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு மேலும் கூறுகிறது.

2011 சட்டசபை தேர்தலில் அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட்டு, 150 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாகியது.

119 தொகுதிகளில் களமிறங்கிய திமுக வெறும் 23 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK will come to power in Tamilnadu says News Nation exit poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X