Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மற்றும் கேரளா என இரு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் முக்கியமானதாக இருக்கிறது. கடந்த காலங்களில் கிறிஸ்தவ சமூகங்கள் குறிப்பிட்ட அணிகளுக்கே வாக்களித்து வந்த சூழலில், இப்போது அது மாறும் ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. இரு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் இந்த முறை என்ன நிலைப்பாடு எடுத்துள்ளனர் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!

கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லை. கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதியும், தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதியும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் சில நாட்களும், தமிழகத்தில் சில வாரங்களுமே வாக்குப்பதிவுக்கு இருப்பதால் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

Christian Votes Tamil nadu and Kerala Signals a Quiet Realignment Ahead of Assembly election 2026

கிறிஸ்தவர்கள்

இதில் கிறிஸ்தவ வாக்காளர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். கேரளாவில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் சுமார் 18% பேரும் தமிழகத்தில் 6% பேரும் கிறிஸ்தவர்களாக உள்ள சூழலில், அவர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது கவனம் ஈர்த்துள்ளது. சமீப காலமாக நடக்கும் மாற்றங்கள் கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதைக் கணிக்க முடியாத ஒன்றாக மாற்றி வருகிறது.

பாரம்பரியமாகக் கேரளாவில் உள்ள கிறிஸ்தவ வாக்காளர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்து வந்தனர். தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்போதும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கே பெரும்பாலும் வாக்களித்தனர். ஆனால், இதில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கேரளா

கேரளாவில் ஒரே அணிக்குப் போன கிறிஸ்தவ வாக்குகள், தற்போது பிரிய ஆரம்பித்துள்ளது போலத் தெரிகிறது.. சபை வேறுபாடுகள், உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் மாறிவரும் அரசியல் எனப் பல காரணங்களால் கேரளாவில் கிறிஸ்தவ வாக்குகள் பிரிகிறது. மத்திய கேரளாவில் கிறிஸ்தவ வாக்குகள் அதிகமாகவே பிளவுபட ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸில் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்கள் இடதுசாரிகள் பக்கம் திரும்புகிறார்கள். 2016, 2021 தேர்தல்களில் இந்த பகுதிகளில் இடதுசாரிகள் கணிசமான தொகுதிகளில் வெல்ல இதுவே காரணமாகும்.

என்ன நிலைமை

அதேநேரம் கிறிஸ்தவ வாக்குகள் முழுமையாக இடதுசாரிகள் பக்கம் போய்விட்டது எனச் சொல்ல முடியாது. சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டது. கிறிஸ்தவ வாக்காளர்கள் முழுமையாகக் காங்கிரஸில் இருந்து விலகிவிடவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆச்சரியமளிக்கும் வகையில் கேரளாவில் பாஜகவும் கிறிஸ்துவ சமூகங்களைத் தீவிரமாக அணுகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி திருச்சபை தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இருப்பினும், பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த கவலைகள் இருப்பதால் பாஜகவுக்குப் பெரியளவில் கிறிஸ்தவ வாக்குகள் செல்வதில்லை.

தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த காலங்களில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கே கிறிஸ்தவ வாக்குகள் சென்றுள்ளன. ஆனால், இந்த முறை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் களத்தில் வந்துள்ளதால்.. அதில் சிக்கல் உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகள் பற்றிய புரிதல் இல்லாத இளம் வாக்காளர்களின் வாக்கு பிரிந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. விஜய்க்குப் பெரியளவில் வாக்குகள் பிரியவில்லை என்றாலும் ஒருங்கிணைந்த வாக்கு வங்கிக்கு இது சவாலை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதனால் திருச்சபை நிறுவனங்களும் சமூகத் தலைமைகளும் தற்போது அதிக எச்சரிக்கையுடனும், சமநிலையான நிலைப்பாட்டுடனும் செயல்படுகின்றன. வெளிப்படையான ஆதரவைத் தவிர்த்து, அரசியல் எல்லைகளைக் கடந்து பல தரப்பினருடனும் தொடர்பில் உள்ளன. அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் பெரிய அளவிலான வாக்குகள் பிரிய ஆதாரம் இல்லை என்றாலும், சிறிய பிளவுகள் தெளிவாகவே தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+