இருட்டறையில் நிர்வாணமாக 20 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு.. கோவாவில் ஷாக்
கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனாஜி: கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவா தலைநகர் பனாஜியை அடுத்த, கன்டோலிம் என்ற கிராமத்தில், பெண் ஒருவர் தனியறையில், 20 ஆண்டுகளாக, அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், குறிப்பிட்ட வீட்டில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், இருட்டறையில், நிர்வாண கோலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
அந்த பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பாக, தனது பெற்றோருடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டும் உள்ளார்.
ஆனால், அவரது கணவருக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணோடு திருமணமான விஷயம் தெரியவரவே, உடனடியாக, கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கே, அந்த பெண் திரும்பி வந்துள்ளார்.
சில நாட்களில், அவர் நடவடிக்கையில் விசித்திரமான குணங்கள் தெரிய ஆரம்பித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த பெண்ணை ஒரு தனியறையில் தள்ளி, அடைத்து வைத்து விட்டனர். ஒரு ஜன்னல் வழியாக, தண்ணீர், உணவு மட்டும் கொடுத்து வந்துள்ளனர்.
இதனிடையே அவரின் பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இருட்டறையில், 20 ஆண்டுகளாக, அந்த பெண் வசித்து வந்த நிலையில், அவரின் சகோதரர்கள் மட்டும் தற்போது அதே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த விவகாரங்கள் எதுவுமே தெரியாமல், அவர் இருட்டறையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். தற்போது, போலீசார் அவரை மீட்டுள்ளனர். இதுபற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications