ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: அன்பழகன் மனு மீது பவானிசிங் பதிலளிக்க கர்நாடகா ஹைகோர்ட் உத்தரவு!
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பவானிசிங் பதிலளிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங்கே, இதிலும் ஆஜராகி வருகிறார்.

பவானிசிங்கை நீக்கக்கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த பைரரெட்டி கடந்த 19-ந் தேதி விசாரித்தார். அப்போது "அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் நியமனம் குறித்து மனுதாரர் அன்பழகனோ, கர்நாடக அரசோ உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஆர்.கே.தேசாயிடம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் புதிய மனு(ரிட்) ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"இவ்வழக்கின் நீதிபதி நியமனம், அரசு வழக்கறிஞர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் தனது வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானிசிங்கை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்துள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
எனவே உடனடியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங்கை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அவசர வழக்கு
இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கே.எல்.மஞ்சுநாதாவிடம் தி.மு.க. தரப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ரிட் மனு மீதான விசாரணை நீதிபதிகள் மஞ்சுநாதா, சுஜாதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பவானிசிங் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications