இளையராஜா சங்கீத அகாடமி அமைக்க இலவச நிலம்!- கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவிப்பு
1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசின் நிஷாகந்தி விருது நேற்று மாலை வழங்கப்பட்டது.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி இந்த விருதினை இளையராஜாவுக்கு வழங்கினார்.

கேரள சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும், திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார் தலைமை தாங்கினார்.
முதல்வர் உம்மன் சாண்டி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 27-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.
நடன, இசை விழாவை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளாக சாதனையாளர்களுக்கு கேரள அரசு சார்பில் நிஷாகந்தி விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இசை அமைப்பாளர் இளைய ராஜாவுக்கு சாதனையாளர் விருதை முதல்வர் உம்மன்சாண்டி வழங்கினார்.
விழாவில் முதல்வர் உம்மன்சாண்டி பேசுகையில், "இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளம் பெருமை கொள்வதுடன் புகழின் உச்சிக்கே சென்று விட்டது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்," என்றார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications