4 மாநிலத்தில் 50 வழக்குகள்- நடிகை லீனா மரியாபாலின் காதலன்- அதிரவைக்கும் தினகரனின் புரோக்கர் சுகேஷ்!

டெல்லியில் சிக்கிய டிடிவி தினகரனின் புரோக்கர் சுகேஷின் மறுபக்கம் அதிரவைக்கிறது. இவர்தான் மெட்ராஸ் கபே படத்தில் நடித்த நடிகை லீனாவின் காதலன்.

By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருப்பவர்கள் டிடிவி தினகரனும் அவரது டெல்லி புரோக்கருமான சுகேஷ் சந்திராவும்தான்.. டெல்லியில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திராவின் மறுபக்கம் அதிரவைக்கிறது.

பெங்களூரில் பாலாஜி என்ற பெயரில் வலம் வந்த சுகேஷ் 17 வயதிலேயே கிரிமினலாகிப் போனவர். பெங்களூரு ரெசிடென்சி சாலையில் உள்ள பள்ளியில்தான் சுகேஷ் என்கிற பாலாஜி படித்தார்.

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் பெயரை குறிப்பிட்டு அவரது உறவினர் எனக் கூறி மோசடியில் ஈடுபடுவதுதான் சுகேஷின் ஸ்டைல். இப்படித்தான் பெங்களூருவில் 100 பேரிடம் ரூ75 கோடியை ஆட்டைய போட்டார் சுகேஷ்.

4 மாநிலங்களில் 50 வழக்குகள்

கர்நாடகாவில் மட்டுமல்ல தமிழகம் உட்பட 4 மாநிலங்களிலும் கைவரிசையை காட்டியதால் சுகேஷ் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்லன. 2013-ம் ஆண்டு தமிழக ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டவர் சுகேஷ்.

லீனாவின் காதலன்

மெட்ராஸ் கபே இந்தி படத்தில் நடித்த கேரளா நடிகை லீனா மரியபாலின் காதலன்தான் இந்த சுகேஷ். இந்த இருவரும் 2013-ல் சென்னையில் பலரிடம் பணம் பறித்ததாக போலீசில் சிக்கினர். சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ19 கோடி மோசடி செய்த புகாரும் சுகேஷ் மீது நிலுவையில் உள்ளது.

மும்பையில் நிதி நிறுவனம்

சென்னை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுகேஷ் மும்பைக்கு ஓடிப் போய் நிதிநிறுவனம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப்பானவர். மக்களிடம் கொள்ளையடிக்கும் இந்த பணம் மூலமாக காதலி மரியாபாலினுடன் சேர்ந்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் சுகேஷ்.

உல்லாசமே உலகம்

ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த கை கடிகாரங்கள் என பொதுமக்கள் பணத்தில் காதலியுடன் உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார் சுகேஷ். இத்தகைய பக்கா பிராடுவான சுகேஷ்தான் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் டிடிவி தினகரனுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார்.

தினகரனின் புரோக்கர்

இந்த தொடர்பில்தான் ரூ50 கோடி பணம்தாங்க... டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலமாக இரட்டை இலை சின்னத்தை மீட்டுவிடலாம் என டிடிவி தினகரனிடம் பேரம் பேசியிருக்கிறார். தினகரனும் முதல் கட்டமாக ரூ1.30 கோடி கொடுத்துவிட டெல்லி போலீஸில் கையும் களவுமாக சிக்கிவிட்டார் சுகேஷ். தற்போது 27 வயதுதான் ஆகும் சுகேஷுக்கு டிடிவி தினகரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? சசிகலா உறவினர்கள் யார் யார் சுகேஷுடன் தொடர்பில் இருந்தனர் என துருவி துருவி விசாரிக்கிறது டெல்லி போலீஸ்.

English summary
Today Sukesh Chandrasekar is all over the news for allegedly trying to help Sasikala Natarajan's nephew T T V Dinakaran bribe Election Commission of India officials to bag the two leaves symbol of the AIADMK.
Please Wait while comments are loading...