தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். அஷ்டமசனி இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை. ஜென்மத்தில் கேது இருப்பதால் விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். காரியசித்தி மாலை கேட்பது நன்மையைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, படபடப்பு, கால் பிடிப்பு, ஜாயிண்டுகளில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பயணங்கள்
வருடம் தொடங்கியதுமே உங்கள் பயணங்களைத் தொடங்கி விடுவீர்கள். கோளார் பதிகத்தைக் கேட்பது நன்மையைத் தரும். எதிரிகள் விஷயத்தில் இருந்த பதட்டம் நீங்கும். கோளார் பதிகத்தை கேட்பது நன்மையைத் தரும். எதிரிகள் விஷயத்தில் இருந்த பதட்டங்கள் நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தாய் தந்தையின் ஆதரவு கிடைக்கும். துணை உங்களுக்காக கூடவே நிற்பார்கள்.
முன்னேற்றம்
காதல் அமைப்பில் ஏற்றம் ஏற்படும். நிறைய நன்மைகள் ஏற்படும் நல்ல காலகட்டம். தேவையில்லாத குழப்பம், மன நிலையில் மாற்றம் நிறைந்து கொண்டே இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் சண்டை, சச்சரவுகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் நன்றாக இருக்கும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாகச் செல்வது நல்லது.
திடீர் அதிர்ஷ்டம்
படிக்கட்டுகளில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஹீல்ஸ் போடுவதை தவிர்ப்பது நல்லது. கால்களில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இளம்வயது பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ரத்த பந்த உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.
உறவினர்களால் பண வரவு, சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். பித்ரு தோஷம் நீங்கும். ஜூன் மாதத்திற்குப் பிறகு குருவே வந்து அஷ்டமத்தை பார்ப்பதால் எல்லா விதத்திலும் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications