For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பி.யில் அம்மன் கோவிலை கட்டிய முஸ்லிம் பெண்- இருமதத்தாரும் இணைந்து வழிபாடு!

By Mathi
Google Oneindia Tamil News

மன்ட்சோர்: மத்திய பிரதேச மாநிலத்தில் அம்மன் கோவிலை முஸ்லிம் பெண் தொழிலாளர் ஒருவர் புனரமைப்பு செய்து கட்டியுள்ளார். இக்கோவிலில் நாள்தோறும் இந்து, முஸ்லிம்கள் என இருமதத்தாரும் இணைந்து வழிபாடு நடத்தி மத நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

மத்திய பிரதேசத்தின் மன்ட்சோர் மாவட்டத்தில் இந்திரா காலனியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தொழிலாளர் சுக்ரா பீ. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமது வீட்டு அருகே ஒரு பாழடைந்த கோயில் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

Muslim women build Hindu Temple in MP

சிதிலமடைந்த அக்கோவில் குறித்து காலனி மக்களின் கனவத்துக்கு சுக்ரா பீ கொண்டு சென்றார். பின்னர் ஒவ்வொருவரிடமும் சிறிது தொகையை வசூலித்து அக்கோவிலை சிறிய அளவில் கட்டி முடித்தார் சுக்ரா பீ.

தற்போது நவராத்திரி திருவிழாவை இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த அம்மன் கோவிலில் கொண்டாடுகின்றனர்.

இது குறித்து சுக்ரா பீ கூறுகையில், துர்கா அம்மன் தான் உலகத்தின் தாய்.. அதனால்தான் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன் என்கிறார்.

மதநல்லிணக்க அடையாளம்யா...

English summary
Sughra Bi, a Muslim woman has been build a Hindu Temple in Mdhya Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X