தமிழக எதிர்த்தும் பலனில்லை.. நெல்லை, நாமக்கல், வேலூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கிறது மத்திய அரசு
ஏற்கனவே நாடு முழுக்க 80 நகரங்களில் நீட் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை, மாணவர்கள் பலன்பெற மேலும் 23 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது
டெல்லி: தமிழகத்தில் நெல்லை உட்பட 3 நகரங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. பாஜக தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளுமே நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று தெரிவித்தார்.
#NEET 2017 will be conducted from 23 new cities in the country @JPNadda #CBSE pic.twitter.com/hTsdmobfW0
— Prakash Javadekar (@PrakashJavdekar) March 24, 2017
டிவிட்டரில் அவர் இதுகுறித்து கூறுகையில், ஏற்கனவே நாடு முழுக்க 80 நகரங்களில் நீட் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இம்முறை, மாணவர்கள் பலன்பெற மேலும் 23 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.
இதனிடையே, நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் புற்றீசல் போல பெருகியுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் கடந்த ஆண்டு சில நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டன. இந்த ஆண்டு சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங் களிலும் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications