முதன் முறையாக அந்த வார்த்தையை பயன்படுத்திய சீனா! வெனிசுலா விஷயத்தில்.. அமெரிக்காவுக்கு வார்னிங்
பெய்ஜிங்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து சீனா பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் கவனம் பெற்றிருக்கிறது.
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு கொகைன் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இந்த கடத்தலுக்கு தலைமையாக மதுரோ இருக்கிறார் என்று கூறியும், அவரை அமெரிக்க ராணுவம் கைது செய்திருக்கிறது.

இப்படி இருக்கையில், இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், வெனிசுலா நிலவரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், "வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோவையும் அவரது மனைவியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், வெனிசுலா அரசாங்கத்தை கவிழ்ப்பதை நிறுத்த வேண்டும்" என அமெரிக்காவை நேரடியாக வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் என்றும் சாடியுள்ளது.
இந்த அறிக்கையில் சீனா 'Shēn biǎo zhènjīng' என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறது. இந்த வார்த்தையை இதற்கு முன் ஈரான் மீதான தாக்குதலின் போது கூட சீனா பயன்படுத்தவில்லை. உலக தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதுதான் இதற்கு முன்பு சீனா இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளது. இந்த வார்த்தைக்கு 'அமெரிக்கா ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்று அர்த்தம்.
இன்று வெனிசுலா அதிபரை கடத்தியவர்கள், நாளை சீன அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்க முடியும்? எனவேதான் சீனா இந்த விஷயத்தை ஆழமாக பார்க்கிறது. அதன் வெளிப்பாடுதான் 'Shēn biǎo zhènjīng' என்கிற வார்த்தையின் பயன்பாடு என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் ஆயுதம் ஏந்திய ஆக்கிரமிப்பு செயல் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தது. சீனாவும், ரஷ்யாவும் இதை சீரியஸாக பார்க்க காரணம் இருக்கிறது. வெனிசுலாவின் எண்ணெய் வளம் கைப்பற்றப்பட்டால், அது அமெரிக்காவின் ஆயுத விரிவாக்கத்திற்கு ஊக்கம் கொடுக்கும். உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிலான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும். இதன் மூலம் ரஷ்யாவை கட்டுப்படுத்தும்.
அடுத்தப்படியாக ஈரானை மொத்தமாக காலி செய்யவும் தயங்காது. ஈரான் போனால், சீனா தடுமாற வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
-
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications