Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோர்டான் விமானியை எப்படி கொல்லலாம்: ட்விட்டரில் ஐடியா கேட்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: தாங்கள் பிடித்து வைத்துள்ள ஜோர்டானைச் சேர்ந்த விமானியை எவ்வாறு கொலை செய்வது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசீஸ்பெஹ்(26) என்ற மாவோஸை பிணையக் கைதியாக பிடித்தனர். விமானப் படை விமானியான அவர் தனது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சிரியாவின் ரக்கா நகரில் தரையிறங்கினார். அப்போது தான் அவர் தீவிரவாதிகளிடம் சிக்கினார்.

Islamic State asks Twitter users to 'suggest a way to kill the Jordanian pilot'

தீவிரவாதிகள் விமானியை பேட்டி கண்டு அதை தங்களின் மாதாந்திர பத்திரிக்கையில் வெளியிட்டனர். அந்த செய்தியை அவர்கள் இணையதளத்தில் ஆங்கிலத்திலும் வெளியிட்டனர். இது குறித்து கருத்து தெரிவிக்க ஜோர்டான் அரசு மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ள முதல் வெளிநாட்டு விமானப்படை விமானி மாவோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாவோஸை எவ்வாறு கொலை செய்வது என்று பரிந்துரை செய்யுமாறு தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். ட்விட்டரில் மாவோஸுக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாவோஸ் ஆதரவாளர்கள் #We Are All Moaz என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக விட்டுள்ளனர். ஜோர்டான் ராணி ரைனா கூட இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+