Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலை 3 மணி.. சிங்கப்பூர் சாலைகளில் தனியாக சுற்றிய இளம்பெண்.. அப்போ என்ன நடந்துச்சுனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவர் அதிகாலை 3 மணியளவில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்த விஷயங்களை அவர் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்

இந்தியர்கள் பலரும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி இந்தியர்கள் அதிகம் வெளிநாடுகளில் ஒன்று சிங்கப்பூர். ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்கிறார்கள். அங்கேயே தங்கள் படிப்பு, வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். கணிசமானோர் அங்கேயே செட்டில் ஆகிறார்கள். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் பலர் சுற்றுலாவுக்காகவும் சிங்கப்பூர் செல்கிறார்.

Indian Woman in Singapore Films Empty 3 AM Streets Viral Video Compares Safe Nightlife to India

சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்

அப்படிச் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண் கிருத்திகா ஜெயின் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அதிகாலை 3 மணிக்கும் சிங்கப்பூர் சாலைகளில் தான் பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.. அதிகாலையில் வெறிச்சோடிய சாலைகளில் அவர் தனியாக நடந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சிங்கப்பூரில் அவர் தனியாக நடந்து செல்கிறார். சாலைகளில் யாருமே இல்லை.. தெருவிளக்குகளின் வெளிச்சம் மட்டுமே உள்ள நிலையில், சாலைகளில் அமைதியாகவும் ஆரவாரம் இல்லாமலும் இருக்கிறது. அந்த காலியான சாலையில் அவர் தனியாக நடந்து செல்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த அவர், தனது அனுபவம் ஏன் ஆச்சரியம் தருவதாக உள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.

3 மணிக்கு தனியாக வாக்கிங்

இது தொடர்பாக அவர், "சிங்கப்பூரில் அதிகாலை 3 மணி ஆகிறது.. நான் இப்போது வீட்டிற்கு நடந்து செல்கிறேன்! யாராவது பின்னால் வருகிறார்களோ என பயந்து திரும்பிப் பார்க்கத் தேவை இல்லை.. இந்தியாவில் இந்த நேரத்தில் தனியாக வெளியே வரக் கூட யோசிக்க மாட்டேன். ஆனால், சிங்கப்பூரில் இது சாதாரணமான ஒன்று. வழக்கம் போல வீட்டிற்குத் திரும்புவது போலத் தான் இருக்கிறது.

இந்த பாதுகாப்பு உணர்வு என்பது நகரத்தின் புகழ்பெற்ற கட்டிடங்களையோ, சுற்றுலா இடங்களையோ சார்ந்தது அல்ல.. இது ஒரு அடிப்படை விஷயம்.. சிங்கப்பூரில் இது ஆடம்பரம் கிடையாது, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி. அந்தளவுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும் இடம் தான் சிங்கப்பூர்.. இந்த நகரத்தை நான் நேசிப்பதற்குக் காரணம் சுற்றுலா இடங்களோ, வானளாவிய கட்டிடங்களோ அல்ல; இதுதான்" என்றும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்..

பாதுகாப்பு உணர்வு

அதில் கிருத்திகா, வெறிச்சோடிய சாலைகளையும் அமைதியான சிங்கப்பூர் சாலைகளைக் காட்டுகிறார். அந்த வீடியோவில், "ஒரு பெண்ணாக, இரவில் இந்த பாதுகாப்பு உணர்வை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு தரப்பினரும் கிருத்திகாவின் கருத்தை ஆமோதித்தனர்.

நெட்டிசன்கள்

இது தொடர்பான நெட்டிசன் ஒருவர், "நான் ஒப்புக்கொள்கிறேன்! சிங்கப்பூர் இரவில் அனைவருக்கும் முற்றிலும் பாதுகாப்பானது" என்று பதிவிட்டார். மற்றொருவர், "இதைப் பகிர்ந்ததற்கு நன்றி, பாதுகாப்பு என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை," என்று குறிப்பிட்டார். அந்த வீடியோவுக்கு கீழ் பலரும் பெண்கள் பாதுகாப்பு, நகரத் திட்டமிடல் மற்றும் ஒரு நகரம் வாழத் தகுதியானது எப்படி என்பது குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+