அதிபர் தேர்தலுக்கு உத்தரவிடும் பிரகடனத்தில் நல்ல நேரம் பார்த்துக் கையெழுத்திட்ட ராஜபக்சே!
கொழும்பு: 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே, அதிபர் தேர்தல் அறிவிப்புக்கான பிரகடனத்தில் கையெழுத்திடும் முன் நல்ல நேரத்திற்காக காத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
இது செவ்வாய் கிரக மோக காலம். இருந்தாலும் ராகு காலம், நல்ல நேரம், எமகண்டம், குளிகை, அஷ்டமி, நவமி என நம்பிக்கைக்கும் பஞ்சமில்லை.
அனைத்துத் துறையிலும் இந்த நம்பிக்கை கொண்டோர் அதிக அளவில் இருக்கத்தான் செய்கின்றனர். இது நம்பிக்கை சம்பந்தமானது என்பதால் அதில் யாரும் தலையிடவும் முடியாது.

நம்ம ஊர் அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்த நேரம் பார்த்து எதையும் செய்வது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கே நல்ல நேரம் பார்த்தவர்கள் நமது அரசியல்வாதிகள்.
அதேபோல இலங்கையிலும் ராஜபக்சேவுக்கு இந்த நல்ல நேரம், எமகண்டம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உண்டு. அவர் எதைச் செய்தாலும் நேரம் காலம் பார்த்துத்தான் செய்வாராம்.

இலங்கையில் முன்கூட்டியே அதிபர் தேர்தலை அறிவித்துள்ளார் ராஜபக்சே. இதுதொடர்பாக அவர் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 3வது முறையாக அவர் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
இந்த பிரகடன உத்தரவில் அவர் கையெழுத்திடுவதற்கு முன்பு நல்ல நேரத்திற்காக காத்திருந்ததை படமாக்கி வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தில் தனது கடிகாரத்தில் நல்ல நேரம் வந்து விட்டதா என்று பார்க்கிறார். அவருக்கு அருகில் நிற்பவரும் தனது செல்போனிலும், கடிகாரத்திலும் நல்ல நேரத்தைப் பார்க்கிறார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications