ஜாதியைச் சொல்லி திட்டுகிறார் .. "தாடி" பாலாஜி மீது மனைவி பரபரப்பு புகார்
சென்னை: தனது ஜாதியைச் சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் என்று கூறி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தாடி பாலாஜி. லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார்.
இவரது மனைவி பெயர் நித்யா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மாதவரத்தில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. டிவி நிகழ்ச்சியில்தான் மோதல் வெடித்ததாக பலரும் நினைத்தனர். ஆனால் இவர்களுக்குள் சமீப காலமாகவே நிஜத்திலும் மோதல் இருந்து வந்துள்ளது.

போலீஸில் புகார்
இந்த நிலையில் தற்போது போலீஸ் நிலையம் வரை இவர்களது மோதல் வந்து விட்டது. மாதவரம் காவல் நிலைத்தில் பாலாஜி மீது நித்யா திடீரென பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

ஜாதியைச் சொல்லித் திட்டுகிறார்
அந்தப் புகாரில், தனது சமுதாயத்தைக் குறிப்பிட்டு சொல்லி திட்டுகிறார். அடிக்கிறார். கொடுமை செய்கிறார் என்று நித்யா பரபரப்பான புகாரைக் கூறியுள்ளார்.

சின்னத் திரையில் பரபரப்பு
நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி கொடுத்துள்ள இந்த பரபரப்பான புகாரால் சின்னத் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜாதியைச் சொல்லி பாலாஜி திட்டுவதாக அவரது மனைவியே கூறியிருப்பதால் இந்த விவகாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமாதான முயற்சிகள்
பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளையும் இருவருக்கும் வேண்டியவர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரச்சினை இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. மாதவரம் போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications