தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை: சொல்கிறார் மாஃபா
டிடிவி தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை எனமுன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். விரைவில் அதிமுக ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கேபி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது,
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படுவதுதான் உண்மையான அ.தி.மு.க. இது தொடர்பான தீர்ப்பு சட்டரீதியாகவும், அரசியல் சாசனம் ரீதியாகவும், தேர்தல் ஆணையம் மூலமாகவும் வரும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார்? என்பது குறித்து நாளை ஓ.பன்னீர்செல்வம் தக்க பதில் அளிப்பார்.
அ.தி.மு.க.வின் ஆட்சி மன்ற குழு வெகு விரைவில் அமைக்கப்படும். டி.டி.வி. தினகரன் அமைத்துள்ள ஆட்சி மன்ற குழுவை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அவர் துணை பொதுச்செயலாளர் என்பதை தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை. ஆகையால் அது செல்லாது. இவ்வாறு முன்னாள் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications