திவாகரன் பேச்சால் வெடித்தது கலகக் குரல்! மூத்த தலைவர்கள் போர்க்கொடியால் உடைகிறது அதிமுக?
சசிகலாவின் தம்பி திவாகரன் அதிமுகவுக்கு உரிமை கோரும் வகையில் பேசியதற்கு எதிராக கலகக் குரல் வெடித்துள்ளது. திவாகரனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கோரும் வகையில் சசிகலாவின் தம்பி திவாகரன் பேசிய பேச்சு அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, திவாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக உடைவது தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றால் அக்கட்சி உடைவது உறுதி என கூறப்பட்டு வந்தது. தற்போது சசிகலா அதிமுக பொதுச்செயலராக பதவியேற்று 15 நாட்களான நிலையில் கலகக் குரல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

கேபி முனுசாமி எதிர்ப்பு
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது இருந்தே தாங்கள்தான் பாதுகாத்து வருகிறோம் என சசிகலாவின் தம்பி திவாகரன் பேசிய பேச்சால்தான் இந்த போர்க்கொடி எழுந்துள்ளது. திவாகரன் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திவாகரனுக்கு என்ன தொடர்பு?
அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரனின் பேச்சு கொந்தளிக்க செய்கிறது எனவும் கேபிமுனுசாமி கூறியுள்ளார். ஏற்கனவே அதிமுகவின் மூத்த தலைவர்கள் கேபிமுனுசாமி, பிஹெச் பாண்டியன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் சசிகலாவின் ஆதிக்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தீபா முடிவு
இந்த நிலையில் இன்று புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிக்க உள்ளார். இந்த சூழலில் கேபி முனுசாமி பகிரங்கமாக சசிகலா குடும்பத்துக்கு எதிராக கலககக் குரல் எழுப்பியிருக்கிறார்.

உடைகிறது அதிமுக?
கேபி முனுசாமியின் கலகக் குரல் அதிமுக உடையக் கூடும் என்பதற்காக பிள்ளையார் சுழி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மன்னார்குடி கோஷ்டியின் ஆதிக்கம் தலைதூக்கும்; அதிமுக உடைவது தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications