''எங்கே செல்லும் இந்த பாதை''.. இது பாஜகவின் கூட்டணிக்கு அலையும் பாட்டு!
சென்னை: வரும் தேர்தலில் யாருடனாவது எப்படியாவது கூட்டணி அமைத்து போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறது பாஜக.
தேமுதிக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது, விஜயகாந்த் கைவிட்டால் அதிமுக, அதுவும் நடக்காவிட்டால் பாமக உடன் கூட்டணி சேரவும் பாஜக தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இவர்களில் யாராவது தங்களை சேர்க்க மாட்டார்களா என்று எல்லா பக்கமும் அலை பாய்ந்து வருகிறது பாஜக.
சட்டசபை தேர்தலில் வைகோ, இடதுசாரிகள், திருமாவளவன் ஆகியோர் ஒரு அணியாகவும், பாமக தனியாகவும், தேமுதிக இழுபறியாகவும் நிற்பதால், திமுகவுக்கு இன்னும் போதுமான பலம் கிடைக்கவில்லை என்பதால் கூட்டணி அமைப்பது பற்றி கவலையே படாமல் தேர்தல் வேலைகளை பரபரப்பாக செய்து வருகிறது ஆளும் அதிமுக.
திமுகவோ காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்டு, விஜய்காந்த் வந்தால் வரட்டும் இல்லாட்டி போகட்டும் என்ற நிலைக்கு வந்து வேட்பாளர் நேர்காணலை தொடங்கி விட்டது. திமுகவில் பாஜகவுக்கு துண்டு போடும் சுப்பிரமணிய சாமியின் முயற்சி பலிக்கவில்லை.
நான்தான் 'கிங்' யாருடன் கூட்டணி என்பதை வேட்பாளர் நேர்காணலில் ஆலோசனை செய்து விட்டு அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். மக்கள் நலக்கூட்டணியோ விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாகி வருகிறது. இக் கூட்டணியில் பாஜகவுக்கு இடம் இல்லை என்று தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.

பாஜகவின் கூட்டணி கணக்கு
பாஜகவுக்கு எஞ்சி இருப்பது அதிமுக, தேமுதிக, பாமக தான். ஆனால், தேமுதிக தலைவர் விஜய்காந்த் என்ன செய்யப் போகிறார் என்று தெரியாததால் அதிமுக, பாமகவுடனும் பேச்சு நடத்திக் கொண்டுள்ளது பாஜக. அதிமுகவிடம் இருந்தும் சரியாக சிக்னல் கிடைக்காவிட்டால் கடைசியாக பாமக உடன் கூட்டணி சேரவும் பாஜக தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக மாநில தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நேரடியாகவே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தேமுதிக உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறி வருகிறார்.

முதல்வர் வேட்பாளர்
அதே நேரத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி மக்களால் ஒதுக்கப்பட்ட ஊழல் கூட்டணியாகவும், மக்கள் நலக் கூட்டணி பலமற்றதாகவும் இருக்கின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியை இந்தத் தேர்தலிலும் தொடர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்தக் கட்சியும் பாஜகவுடன் இணையலாம். கூட்டணி முடிவான பிறகு, முதல்வர் வேட்பாளர் அல்லது முதல்வரை முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனோ,
எங்கள் கூட்டணியில் தான் விஜயகாந்த் இருக்கிறார் எனவே அது குறித்து நாங்கள் கவலையே படவேயில்லை என்றும் தெரிவித்துள்ளார் பொன். ராதாகிருஷ்ணன். நான் பாஜக கூட்டணியில் இல்லை என்று விஜய்காந்த் பலமுறை கூறிய பிறகும் அவரை விட்டுவிட பாஜக தயாராக இல்லை என்பதையே தமிழிசை, பொன். ராதாவின் பேச்சு காட்டுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி
விஜயகாந்த் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் பிளான் 'பி' யாக அதிமுகவை நாட முடிவு செய்துள்ளது பாஜக. இதற்காக பாஜக தரப்பில் இருந்து அதிமுக உடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடந்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியை இழுக்க திட்டம்
இந்த கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்தை பிரச்சாரம் செய்ய அழைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் பாஜக தலைவர்கள். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்தின் ஆதரவை பெற கட்டாயமாக முயற்சிப்போம். திரைப்பட தயாரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பாக அவரை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

மதிமுகவிற்கு அழைப்பு
பாஜகவை விட மதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தவே அதிமுக தலைமை விரும்புவதாகவும், கடந்த காலங்களைப் போலவே, 10, இடங்கள் வரையில், மதிமுக ஒதுக்கிக் கொடுக்கலாம் எனவும் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ம.தி.மு.கவுக்கு, அ.தி.மு.க தரப்பிலிருந்து ரகசிய அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் நலக் கூட்டணியை விட்டு வைகோ வர வாய்ப்பில்லை.

பாமக அணியில் பாஜக
தேமுதிக உடனோ, அதிமுக உடனோ கூட்டணி சாத்தியப்படா விட்டால் 'பிளான் சி'யும் பாஜக கையில் உள்ளது. பாமக மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என பாஜக மேலிடம் பரிசீலித்து வருகிறது.

கவுரமான வாக்கு சதவிகிதம்
மொத்தத்தில் தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் தங்களது வாக்கு பலம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் அதை எப்பாடுபட்டாவது தவிர்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளத. இந்த சட்டசபை தேர்தலில் கவுரவமான வாக்கு சதவீதத்தை பெறாவிட்டால் 2019 லோக்சபா தேர்தலிலும் வலுவான கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்படும். அந்தத் தேர்தலில் தங்களுக்கு எங்குமே இடம் இல்லாமல் போய்விடும், எனவே இப்போதே யாருடனாவது சேர்ந்து மரியாதையான அளவுக்கு வாக்கு வாங்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக ஆட்சி
அதே நேரத்தில் பாஜக ஊழியர்கள் கூட்டத்தில் பேசியுள்ள தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவோ, சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மேலிடம் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி தமிழகத்திற்கு கண்டிப்பாக வருவார் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றால் கண்டிப்பாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆசைப்படுவதில் என்ன தப்பு?!
-
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications