ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார்
சென்னை: காரைக்குடியில் விஜய் சைக்கிள் ஓட்டியதை பார்த்தேன்.. அது கேலிக்கூத்தாக உள்ளது. அரசியலுக்கு வந்தது சைக்கிள் ஓட்டுவதற்கா என்றும், எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜய்யுடன் நடிகையை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதற்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் நாலாபுறமும் சுற்றி சுழன்று தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் போலீசார் அனுமதி அளித்த கூட்டங்களுக்கும் போகாமல் ரத்து செய்து வருகிறார். நேற்றும் காரைக்குடியில் பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ரோடு ஷோ மட்டுமே சென்றுவிட்டு வீடு திரும்பிவிட்டார்.
இது தவெகவினர் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:- ஜோசப் விஜய் நேற்று காரைக்குடியில் ரோடு ஷோ சென்றதை கூறினார்கள். அப்போது அவர் சைக்கிள் ஓட்டி வந்தார். கை காட்டிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் வந்தார் என்று சொன்னார்கள்.. எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எல்லாரும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகிவிட முடியாது.
நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்
அதற்காக தனி கொள்கைகள் வேண்டும், தனி அமைப்புகள் வேண்டும் இயற்கையான உணர்வுகள் வேண்டும். ஏதோ திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காக ஜோசப் விஜய் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார். என்னை பொறுத்தவரைக்கும் முதலில் அவர் நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும். மக்களுக்காக எதாவது உதவ வேண்டும், செய்ய வேண்டும்.
ஆட்சிக்கு வர வேண்டும் என்று இல்லாமல் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தனியாக வந்திருக்கிறார். நேற்று காரைக்குடியில் சைக்கிள் ஓட்டியதையும் சொன்னார்கள். வேடிக்கையாக இருந்தது. சைக்கிள் ஓட்டுவதற்கா நாம அரசியலுக்கு வந்திருக்கிறோம்.. திமுகவை ஓட்ட வேண்டும் என்பதற்காக அரசியல் செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வர கூடாது.. இதெல்லாம் ஒரு கேலிக்கூத்தான விஷயம்.
ஸ்டாலின் முதல்வர் ஆக மாட்டார்
குமரி முதல் கும்பிடிப்பூண்டி வரை மக்களை பார்த்து வருகிறேன். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ஆட்சிக்கு வரக்கூடாது என்பது குறித்து தான் சொல்லி வருகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் மக்கள் எல்லாரும் ஒத்த கருத்துடன் இருக்க வேண்டும். திமுக இதுவரை தொடர்ந்து ஆட்சியை பிடித்தது கிடையாது. ஸ்டாலின் அதுபோல் வெற்றி பெற்று முதல்வர் ஆக மாட்டார். மக்கள் அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பேசினார்.
ஏற்கனவே விஜய்யை பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பு படுத்தி கடுமையான விமர்சனங்களை நயினார் நாகேந்திரன் முன்வைத்து இருந்தார். நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கோரினார். இந்த சூழலில்தான் மீண்டும் விஜய்யின் சொந்த வாழ்க்கை பற்றி பேசி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்!












Click it and Unblock the Notifications