Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உறுதியாக நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும்: ஆளுநரை சந்தித்த பின் ஓபிஎஸ்

ஆளுநரை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், உறுதியாக நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரங்களை பேசியதாகவும் உறுதியாக நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை வருகை தந்த ஆளுநர் வித்யாசகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். சுமார் 15 நிமிடம் இச்சந்திப்பு நடைபெற்றது.

Dharma will win, says O Panneerselvam

இச்சந்திப்பின் போது முதல்வர் ஓபிஎஸ் தமது ராஜினாமாவை வாபஸ் பெறுவது மற்றும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரவேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

அப்போது, ஜெயலலிதாவின் நல்லாசியுடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆளுநரை சந்தித்து தமிழக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தனை விவரங்களையும் விரிவாக பேசி வந்துள்ளோம்.

உறுதியாக நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என்று மட்டும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+