வெள்ள பாதிப்புக்கு பதிலடி கொடுத்ததா சென்னை? பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை
சென்னை: வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த சென்னையில் பெரும்பான்மையான தொகுதிகள் திமுக பக்கம் செல்கின்றன.
செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு பல மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா அரசுக்கு எதிராக திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மக்களை ஈர்க்கும் வகையிலான விளம்பரங்களை திமுக வெளியிட்டது.

திமுகவின் வியூகத்திற்கு ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. பகல் 12 மணி நிலவரப்படி, சென்னையிலுள்ள 16 தொகுதிகளில் 12 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றது.
அண்ணாநகர், ஆயிரம் விளக்கு போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி போன்றோர் தோல்வி முகத்தில் உள்ளனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை வகித்தாலும், வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. திமுகவின் கோட்டை என்று முன்பு சென்னை வர்ணிக்கப்படும். ஆனால், கடந்த தேர்தலில் அது முற்றிலும் மாறியது.
டிரெண்ட் மாறுவது தெரிந்துதான், சேப்பாக்கம் தொகுதியை தவிர்த்து, தனது சொந்த மாவட்டமான திருவாரூர் தொகுதியில் போட்டியிட ஆரம்பித்தார் கருணாநிதி. ஆனால், இம்முறை திமுகவின் கோட்டையாக தலைநகரம் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக்












Click it and Unblock the Notifications