For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விடுதலை: மு.க.ஸ்டாலின் மவுனம்; நிருபர்களை சந்திக்காத கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது பற்றி திமுக மவுனம் சாதிக்கிறது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து எதுவும் கூறவில்லை. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 24 மணிநேரமாக செய்தியாளர்கள் யாரையும் சந்திக்காமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையையொட்டி, நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

DMK no reaction for Jayalalitha bail

குவிந்த திமுகவினர்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திரளான நிர்வாகிகளும் கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில் நேற்று மதியம் 12.25 மணியளவில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியதையடுத்து கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வெளியேறினர்.

ஸ்டாலின் மவுனம்

நேற்று மதியம் 1.30 மணியளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மு.க.ஸ்டாலின் பதில் எதுவும் கூறாமல் மவுனமாக தனது காரில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.

கருத்து கூற மறுப்பு

இதே போன்று துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவனும் கருத்து கூற மறுத்துவிட்டனர்.

வீட்டிற்கு அடைந்த கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதியும் நேற்று தனது இல்லத்தில் இருந்து வெளியே வரவில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திக்கவில்லை.

English summary
DMK chief M Karunanidhi and Stalin have not reacted to former Chief Minister Jayalalithaa's bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X