சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 6 Episode) சிறகடிக்க ஆசை சிறியலில் 2026 ஏப்ரல் ஆறாம் தேதிக்கான எபிசோட் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண்ணை ஸ்வேதா பார்த்திருக்கிறார் அதே நேரத்தில் ரவி ஸ்டுதி வாழ்க்கையில் நீத்து பால் புதிய பிரச்சனை வருகிறது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடில் (Siragadikka Aasai serial Episode) ஸ்வேதா, விஜயாவின் வீட்டிற்கு வருகிறார். அவர் எல்லோரிடமும் தான் ஒரு குட் நியூஸ் கொண்டு வந்திருப்பதாக சொன்னதும் என்ன விஷயம் என்று எல்லோரும் ஆர்வமாக கேட்க அதற்கு ஸ்வேதா அண்ணாமலையிடம் பெரியப்பா, மனோஜ் அண்ணனுக்கு தனக்கு தெரிந்த ஃபிரெண்டு ஒருவர் மூலம் ஒரு வரன் வந்திருப்பதாக சொல்கிறார்.
பொண்ணுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு வருஷத்திற்குள் டைவர்ஸ் ஆனவர்தான் ஆனா அவங்களுக்கு குழந்தை எதுவும் இல்ல என்று சொன்னதும், விஜயா அமெரிக்காவில் இருப்பது இருக்கட்டும் ஆனா அவங்க குடும்பம் எப்படி என்று விசாரிக்க அதற்கு ஸ்வேதா பொண்ணுடைய குடும்பம் பெரும் பணக்காரர்கள் அவருடைய ஃபேமிலி தற்போது அமெரிக்காவில் இருப்பதாக சொல்கிறார்.
புது மருமகள்
அதற்கு மனோஜ், அப்போ நானும் அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டுமா? இல்லை இங்கே இருந்து எப்பவாவது அங்க போயிட்டு வந்தா போதுமா என்று கேட்கிறார். அதோடு பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களா இருக்காங்க அது தான் பிரச்சனை என சோகமாக சொல்கிறார். இதைக் கேட்டு கடுப்பான முத்து நீயும் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் தாண்டா என சொல்லி கிண்டல் பண்ணுகிறார்.
மீனா கொடுத்த பதிலடி
அதற்கு விஜயா இவனுக்கு பொறாமைடா அமெரிக்கா பொண்ணு உனக்கு பொண்டாட்டியா வரப்போகுது என்றதும் இவன் இப்படி பேசுறான் என்று சொல்ல, அதற்கு முத்து இப்படித்தான் முன்னாடி மலேசியா பொண்ணு என்று ஆட்டம் போட்டீங்க இப்போ அமெரிக்கா பொண்ணு என்று அலம்பல் பண்ணுறீங்க என்று பதிலடி கொடுக்கிறார். உடனே மீனா இவரு யாரையும் பார்த்தும் பொறாமைப்பட மாட்டார் அவருடைய வேலையில் அவர் பெரிய ஆளா தான் இருக்கிறார் என்று சப்போர்ட் பண்ணுகிறார்.
அமெரிக்க பொண்ணு
அப்போது ஸ்வேதா பொண்ணுடைய அப்பாவுக்கு சொந்தமாக ஃபிளைட் இருப்பதாக சொன்னதும் வாயடைத்துப் போன விஜயா, உடனே இந்த சம்மதத்துக்கு ஓகே சொல்கிறார். மனோஜும் ஃபிளைட் இருப்பதை கேள்விப்பட்டதும் டக்குனு மனம்மாறி சம்மதம் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்வேதாவை தங்கச்சி என்றும் கூப்பிடுகிறார். இதைப்பார்த்த முத்து, ஃபிளைட் இருக்குனு தெரிஞ்சதும் ஸ்வேதாவை தங்கச்சி ஆக்கிட்டான் பாத்தியா என்று சொல்லி கிண்டல் பண்ணுகிறார்.
மீனா கொடுத்த ஐடியா
அடுத்ததாக மீனா இந்த விஷயத்தை ஸ்ருதியிடம் சொல்வதற்காக அவருடைய ரெஸ்டாரண்டுக்கு போகிறார். அங்கு ஸ்ருதியிடம் மனோஜுக்கு மிகப்பெரிய வரன் கிடைத்திருப்பதை சொல்வதோடு, நீங்க நிச்சயம் பேச கண்டிப்பாக வர வேண்டும் என அழைக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதிக்கு ஒரு கொரியர் வருகிறது. அதை திறந்து பார்த்த ஸ்ருதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீத்து தான் அந்த கொரியரை அனுப்பி இருக்கிறார். அவர் புதிதாக தொடங்க உள்ள ரவி பொக்கே ஷாப்பிற்கான இன்விடேஷனை அனுப்பி இருக்கும் நீத்து. அதில் தன்னுடைய பெயரை நீத்து ரவி என குறிப்பிட்டு இருக்கிறார்.
நீத்துவின் இந்த செயலால் கோபமான ஸ்ருதி, என்ன செய்வதென்று யோசிக்கையில், மீனா அவருக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். நீத்து அந்த பொக்கே ஷாப் ஓபன் பண்ணும் நாள் அன்று நீங்களும் ரவியும் வெளியூர் போயிருங்க. அது தான் அவளுக்கு நீங்க கொடுக்குற பதிலடியா இருக்கும் என சொல்கிறார்.
நாங்க போயிட்டா கடையை யார் பார்த்துப்பாங்க என ஸ்ருதி கேட்க, அதற்கு மீனா, நானும் அவரும் பாத்துக்குறோம் என சொல்கிறார். மறுபுறம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்த சிந்தாமணியிடம் அவரது ஆதரவாளர்கள், நீங்க தான் ஜெயிப்பீங்க என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரம் பார்த்து மீனா வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். அவரை முத்து மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் அழைத்து வருகிறார். இதைப்பார்த்து வயித்தெறிச்சல் படும் விஜயா, வேட்புமனு தாக்கல் பண்ணுவதற்கே இந்த அலப்பறையா என கேட்க, அதற்கு முத்து என் பொண்டாட்டி தலைவி ஆகப்போறா அதனால் தான் இப்படி செய்கிறோம் என சொல்லி ஆட்டம் போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications