ஒத்திவைக்க மாட்டேன்.. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு.. சபாநாயகர் பிடிவாதம்!
நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருபோதும் ஒத்திவைக்கப்படாது. இன்றே நடக்கும் என்றும் சபாநாயகர் தனபால் உறுதியாக கூறியுள்ளார்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பை வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணி, திமுக, காங்கிரஸ் கோரிக்கையையும் சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், காங்கிரஸ் கட்சியினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் ஸ்டாலின் பேசினார்.
ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ள போது இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு அவகாசமாக நடத்துவது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதனை சபாநாயகர் நிராகரித்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் எப்படி வாக்கெடுப்பு நடத்துவது என்பது எனது உரிமை என்று கூறினார். சபாநாயகரின் உரிமையில் யாரும் தலையிட முடியாது என்று கூறிய தனபால், வாக்கெடுப்பு இன்றே நடக்கும் என்று கூறினார். ஆளுநரின் அறிவுறுத்தலின் படியே நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்கிறது என்று கூறிய சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையையும் நிராகரித்தார். தொடர்ந்து அமளி நீடிக்கிறது.
வேறொரு நாளில் வாக்கெடுப்பை நடத்த திமுக, ஓபிஎஸ், காங்கிரஸ் தொடர் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணி நேரமாக அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் வாக்கெடுப்பை நடத்த முடியாமல் தனபால் தவித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்கெடுப்பு நடக்காமல் இழுபறி நீடிக்கவே, உறுப்பினர்கள் அமைதியாக இருங்கள் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய தனபால் வாக்கெடுப்பு குறித்த எனது அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றார். தொடர்ந்து பேசிய சபாநாயகர், எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்று கூறினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications