தெலுங்கானாவில் கொளுத்தும் வெயிலுக்கு 315 பேர் பலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹைதராபாத்: தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிய நாளிலிருந்து வெயில் தொடர்பான சம்பவங்களில் 315 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
தெலுங்கான மாநிலத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தற்போது வெயிலின் கோர தாண்டவத்துக்கு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன.

பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் சில பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.
கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலால், பல மாவட்டங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சுட்டெரித்த வெயிலின் தாக்கத்திற்கு தெலுங்கானா மாநிலம் முழுவதும் 315 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக நல்கொண்டா மாவட்டத்தில் 91 பேர் மரணமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. வெயில் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் பற்றிக் கண்டறிய அமைக்கப்பட்ட மூவர் கமிட்டி குழு இதனை உறுதிசெய்துள்ளது. அதிகப்பட்சமாக ராமகுண்டம் பகுதியில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தெலுங்கானாவில் தற்போது சராசரியாக 44 டிகிரி வெயில் இருந்து வருகிறது. 2015ம் ஆண்டு கோடை காலத்தின் போது கடும் வெயிலுக்கு தெலுங்கானாவில் 486 பேர் உயிரிழந்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications