For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பெயரை இன்சியலாக போட்ட ராம. ராமநாதன் மாற்றம்: கும்பகோணம் தொகுதி வேட்பாளரானார் ரத்னா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியல் எட்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராம. ராமநாதனுக்கு பதிலாக ரத்னா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா மீது கொண்ட பற்றினால் தனது பெயரை ஜெ. ராமநாதன் என்று கெஜட்டில் மாற்றியர் ஆவார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4ம் தேதி வெளியானது. மறுநாளே அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து 7 முறை வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த வாரம் 8 பேர் மாற்றப்பட்டனர் அதில் சில முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Jayalalitha changes one more candidate for Kumbakonam

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் 26பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சிலரது தொகுதிகள் மாற்றப்பட்டன. ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் வேட்பாளர்கள், ஒருவாரம் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிமுகவில் அதிகரித்து வருகிறது. எனவேதான் சுவர் விளம்பரங்களில் கூட வேட்பாளர்களின் பெயரை எழுதாமல் இரட்டை இலையை மட்டுமே அதிமுகவினர் வரைந்து வைத்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று ஜெயலலிதா, தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். ஜெயலலிதா தவிர 233 தொகுதிகளிலும் அதிமுக , கூட்டணிகட்சி வேட்பாளர்கள் 28ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று கும்பகோணம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராம. ராமநாதன் மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக ரத்னா என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ராம. ராமநாதன்

கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், 44, அதிமுக மற்றும் ஜெயலலிதா மீது, தீராத பற்றுக் கொண்ட அவர், தன் இனிஷியலை, ஜெ என மாற்றி, கெசட்டில் வெளியிட்டார். தன் தாயாக ஜெயலலிதாவை கருதிய அவர், தன் பெயரை, ஜெ.ராமநாதன் என, எழுதினார்.

இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, பெற்றோர் பெயரைத்தான் இனிஷியலாகப் பயன்படுத்த வேண்டும். என் பெயரை பயன்படுத்த வேண்டாம் என, கேட்டுக் கொண்டதால், மீண்டும், ராம.ராமநாதன் என, தன் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டார்.

கும்பகோணத்தில், 1952 முதல் 2011 வரை நடைபெற்றுள்ள சட்டசபை தேர்தலில், 1977ல் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.ராதாவும், 1991ல் ராம.ராமநாதனும் மட்டும் அதிமுகவில் வெற்றி பெற்றனர்.

சென்னை உட்பட தமிழகத்தில் எங்கு ஜெயலலிதா நிகழ்ச்சி நடந்தாலும், அங்கு இவர் ஆஜராவது வழக்கம். ஜெயலலிதா முதல்வராகவும், நான் எம்.எல்.ஏவாகவும் தேர்வாகும்போது தான், எனக்கு திருமணம் நடக்கும் எனக் கூறி வந்த, அவர், 2011 தேர்தலில் குறைந்த ஓட்டுகளில் தோல்வியை தழுவினார்.

கும்பகோணத்தில் 1991ம் ஆண்டு வெற்றி பெற்ற ராம.ராமநாதன் தொடர்ந்து அதே தொகுதியில் 1996, 2001, 2006, 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு 4முறையும் தோல்வி கண்டார். இம்முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வேட்பாளர் பட்டியல் 8வது முறையாக மாறியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்து வாபஸ் பெறும் முன்பாக இன்னும் எத்தனை பேர் மாற்றப்படுவார்களோ?

English summary
The ruling AIADMK has changed eight more candidates for the Tamil Nadu Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X