சிறையில் இருந்தே கொடநாடு கொலையில் ஈடுபட்டது எப்படி.. இருவரை விசாரிக்க கேரளா விரைகிறது போலீஸ்
கொடநாட்டில் கொலையில் தொடர்புடைய, கார் திருட்டு வழக்கில் சிறையில் இருக்கும் இருவரிடம் விசாரணை நடத்த தமிழக போலீஸ் கேரளா விரைந்தது.
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் கேரள சிறையில் உள்ள இருவரை விசாரிக்க தமிழக போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் தேடப்பட்ட 11 குற்றவாளிகளில் போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர்.
கனகராஜ் என்பவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். சயான் என்பர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மனோஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை
அவரை கொடநாடு பங்களாவிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கொலை செய்தது குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் இதில் தொடர்புடையது தெரிய வந்தது.

கேரள சிறை
இதனைத் தொடர்ந்து கார் திருட்டு வழக்கில் கேரள சிறையில் இருக்கம் இருவரை தமிழக போலீசார் விசாரிக்க திட்டமிட்டனர். ஜெம்சீர், ஜித்தின் ஜாய் ஆகிய இருவரிடம் இன்று விசாரிக்க தமிழக போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

அழைத்து வர..
கேரள சிறையில் இருக்கும் ஜெம்சீர் மற்றம் ஜித்தின் ஜாய், கொடநாடு கொலையில் எப்படி ஈடுபட்டார்கள். எந்தவிதத்தில் அவர்கள் கொள்ளை மற்றும் கொலைக்கு உதவிகளை செய்தார்கள் என்று அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். மேலும், அவர்களை நீலகரி மாவட்டத்திற்கு அழைத்து வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ரகசியம்
கேரள சிறையில் இருக்கும் இவர்கள் இருவரும் நீலகிரிக்கு அழைத்து வரப்பட்டு விசாரித்தால் மேலும் பல ரகசியங்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் பல புதிய தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications