ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு என்ன நடக்கும் தெரியுமா? ஒன் இந்தியா தமிழ் சர்வேயை பாருங்க

பாஜக சார்பில் ஆர்.கே.நகரில் யார் நின்றாலும் தோல்வி, என்ற பதிலுக்கு ஆதரவாக 62.67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு இங்கு வெற்றி வாய்ப்பே இல்லை என அவர்கள் கணிக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக, இசையமைப்பாளர் கங்கை அமரனை போட்டியிட செய்தால், வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் அளித்துள்ள பதிலை பாருங்கள்.

ஜெயலலிதா மறைவால், ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் மருது கணேஷ், சசி தரப்பு அதிமுக சார்பில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக சார்பில் மதுசூதனன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது. பாமக போட்டியை தவிர்த்துள்ளது. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளது.

கவுதமி, கங்கை அமரன்

இந்நிலையில், பாஜக ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கவுதமி அல்லது இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் அக்கட்சி சாய்ஸ்சில் உள்ளனர்.

ஆன்லைன் சர்வே

கவுதமி அரசியலில் களமிறங்க சம்மதிக்காத பட்சத்தில் கங்கை அமரனை களமிறக்க பாஜக ரெடியாகிவரும் சூழலில் 'ஒன்இந்தியாதமிழ்' சார்பில் ஆன்லைனில் ஒரு சர்வே நடத்தினோம்.

நான்கு பதில்கள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்? என்ற கேள்வியோடு, அடடே நல்லா இருக்கே, அந்த கட்சியில் யார் நின்றாலும் தோல்வி, அவரை விட்டுவிடுங்களேன், தமிழிசைதான் நிற்க வேண்டும் என்ற 4 பதில்கள் தரப்பட்டன.

 

 

பாஜக வெல்லும்

அடடே நல்லா இருக்கே என்ற பதிலுக்கு 10.95 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் கங்கை அமரன் வெல்லக்கூடும் என்று கணிப்பவர்கள்.

தோல்விக்கே மெஜாரிட்டி

அந்த கட்சியில் யார் நின்றாலும் தோல்வி, என்ற பதிலுக்கு ஆதரவாக 62.67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு இங்கு வெற்றி வாய்ப்பே இல்லை என அவர்கள் கணிக்கிறார்கள்.

 

 

ஐயோ பாவம்

அவரை விட்டுவிடுங்களேன், என்ற பதிலுக்கு 15.67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். பாஜக தோற்கும் என்பதே இவர்கள் எண்ணமும். கங்கை அமரனாவது சும்மா இருந்துவிட்டு போகட்டும் என்பது இவர்கள் எண்ணம்.

தமிழிசை

தமிழிசைதான் நிற்க வேண்டும் என்ற பதிலுக்கு 10.71 சதவீதம் பேர் வாக்கலித்துள்ளனர். தமிழிசை இத்தொகுதியில் நிற்க உள்ளதாக முன்பு ஒரு வதந்தி பரவியிருந்தது நினைவிருக்கலாம்.

English summary
Most of the Oneindia Tamil readers believes while voting for a survey, BJP won't win in the R.K.Nagar by poll.
Please Wait while comments are loading...