அடங்காத பீட்டா... ஜல்லிக்கட்டை தடுக்கக்கோரி தமிழக தலைமைச் செயலாளருக்கு 'உத்தரவு தொனியில்' கடிதம்
தமிழகத்தில் தடையை மீறி நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை தடுக்கக்கோரி தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோ
சென்னை: தமிழகத்தில் தடையை மீறி நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை தடுக்கக்கோரி தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த தடையை முறைப்படி நடைமுறை படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க மறுத்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இதனை தடுக்கக்கோரி தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் ஆகியோருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியை எந்த ஒரு வடிவத்திலும் அனுமதிக்க கூடாது. ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை முறைப்படி அமல்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தடையை முழுமையாக அமலாவதை உறுதிசெய்க என்று கூறி உள்ளது.
பீட்டா அமைப்பு காவல்துறை இயக்குநர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications