எம்எல்.ஏ.க்கள் கடத்தல்: எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை- எந்த நேரத்திலும் கைது?
எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களை கடத்திய வழக்கில் அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் ஐஜி செந்தாமரைக் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் உத்தரவின் பேரில் மன்னார்குடி குண்டர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சிறையில் இருந்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் மாறுவேடத்தில் தப்பினார். அவர் நேரடியாக முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று தமது ஆதரவை தெரிவித்தார். அத்துடன் தாம் கடத்தி வைக்கப்பட்டதாக காவல்துறை இயக்குநரிடம் எம்.எல்.ஏ. சரவணன் புகார் தெரிவித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் கூவத்தூர் போலீசார் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிலர் மீது ஆட்கடத்தல், கொலை மிரட்டல், சிறை வைத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுவிட்டார்.
இதனால் தற்போது கூவத்தூர் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீஸ் ஐஜி செந்தாமரைக் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications