இன்று முதல்.. சசிகலா அக்காள் மகன் தினகரன் வசம் முறைப்படி வந்தது அதிமுக!
சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன், அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் சகோதரி வனிதா மணியின் மகன் டி.டி.வி. தினகரன், அதிமுக துணை பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றிக் கொண்டார்.

இந்நிலையில் ஆட்சியையும் பிடிக்க முயற்சித்த வேளையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு பின்னர் சிறை சென்றார். அதற்கு முன்னதாக, தனது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்கி வழங்கிவிட்டு சென்றார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நிழலாக இருக்கும் டி.டி.வி.தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர். சசிகலாவே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர்தான் என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் தினகரனின் நியமனம் செல்லுமா என்று எதிர்பார்ப்பு உள்ளது.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications